/indian-express-tamil/media/media_files/88THRpWxwjixWXIIJY93.jpg)
543 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 293 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்திய முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜுன் 4) எண்ணப்பட்டன. அதன்படி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) 293 இடங்களிலும் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றாலும், பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. இதனால், பா.ஜ.க அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Election Results 2024 Live Updates: PM Modi, Council of Ministers submit resignation to President Murmu
இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்.டி.ஏ கூட்டத்தில் பீகார் முதலமைச்சரும், ஜே.டி(யு) தலைவருமான நிதீஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே, தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், சரத் பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் சந்தித்துப் பேச உள்ளனர். "அரசாங்க அமைப்பிற்கான கூட்டணியின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு, தெலுங்கு தேசம் அல்லது ஜே.டி. (யு) -வை அணுகுவது குறித்து இந்திய அணிக்குள் இதுவரை எந்த விவாதமும் இல்லை" என்று சரத் பவார் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தனது அமைச்சர்களுடன் இணைந்து வழங்கினார். பிரதமர் மோடியின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பிரதமர் மோடி பதவியில் தொடருகிறார்.
ஜூன் 8, சனிக்கிழமையன்று மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க வாய்ப்புள்ளது. ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு ஒரு பிரதமர் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.