கடனும் இல்லை, காரும் இல்லை… மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த அசையா சொத்தின் நான்கு உரிமையாளர்களில் ஒருவராக மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

By: October 15, 2020, 4:52:10 PM

Prime Minister Narendra Modi  : பிரதமர் நரேந்திர மோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2.80 கோடியாக அறிவிப்பு. அமித் ஷாவின் சொத்து மதிப்பு ரூ. 28.63 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு, தேர்தல் ஆணையத்தில் சொத்து மதிப்பு தகவலை தாக்கல் செய்யும் போது அவரிடம் ரூ. 2.49 கோடி நிகர சொத்து மதிப்பு இருந்ததாக கூறியுள்ளார். இந்த ஆண்டு கொஞ்சம் வளர்ச்சி அடைந்த அவருடைய சொத்து மதிப்பு ரூ. 2.86 கோடியாக உள்ளது.

கடனற்ற மோடி

ஜூன் மாத இறுதியில் அவரிடம் கையிருப்பாக ரூ. 31,450ம், சேமிப்பு கணக்கில் ரூ. 3.38 லட்சமும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்தாஅண்டு அவருடைய வங்கிக் கணக்கில் ரூ. 4,143 மட்டுமே இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு அவருடைய காந்திநகர், ஸ்டேட்பேங்க் கிளையில் உள்ள நிலைத்த வைப்பு தொகை ரூ. 1,27.81,574 ஆக இருந்தது. தற்போது அந்த மதிப்பு ரூ. 1,60, 28,039-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க : மோடியின் நட்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரெம்பிற்கு உதவுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன?

45 கிராம் எடையுள்ள 4 தங்க மோதிரங்களை வைத்திருக்கிறார் மோடி. அதன் மதிப்பு தற்போது ரூ. 1,51, 875 ஆகும். காந்தி நகரில் இருக்கும் வீடு மற்றும் அதனை சுற்றி இருக்கும் நிலத்தின் மதிப்பு ரூ. 1.1 கோடியாக உள்ளது. இந்த அசையா சொத்தின் நான்கு உரிமையாளர்களில் ஒருவராக மோடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் ஏதுமற்றவராக மோடி இருக்கிறார். அவரிடம் காரும், இருசக்கர மோட்டர் வாகனம் என்று ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm modi declares his assets

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X