PM Modi extends greetings on Diwali | பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா சென்ற அவர் அங்கு பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸில் அவர், “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
2014ல் பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, தீபாவளியின் போது ராணுவ தளங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அதில், “பொய், அநீதி மற்றும் வெறுப்பின் இருள் மறைந்து போகட்டும், நம் இந்தியா உண்மை, நீதி மற்றும் அன்பால் ஒளிரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, ஆந்திரா கவர்னர், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க : PM Modi extends greetings on Diwali, celebrates with security forces in Himachal
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“