புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் மோடி – அமித் ஷா

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் விழாவில் 6000 நபர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

By: Updated: May 29, 2019, 10:45:52 AM

Liz Mathew, Abantika Ghosh

PM Modi Gandhinagar MP Amit Shah meeting : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று ஐந்து மணி நேரம் வரை ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத் மற்றும் வாரணாசி தொகுதிகளில் இருவரும் ஒன்றாகவே வந்து தங்களின் நன்றி உரையை நிகழ்த்தியதோடு அமித் ஷாவிற்கு வழங்க இருக்கும் பொறுப்புகள் குறித்தும் உரையாடியதாக தெரிக்கிறது.

மே 30ம் தேதி அன்று அமித் ஷாவிற்கு எந்த அமைச்சரவைப் பதவி தரப்பட உள்ளது என்பது குறித்த தகவல்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் வெற்றிக்காக பல மடங்கு உழைத்தவர் அமித் ஷா. அதனால் அவருக்கு நிச்சயம் சிறந்த பதவியை வழங்க வேண்டும் என்று ஒரு சாரர் கூறி வருகின்றனர்.  மற்ற சிலரோ, இவருக்கு அதிக அளவு அமைச்சரவை பொறுப்புகள் கொடுக்கப்பட்டால், கட்சிப் பணிகளை பார்ப்பது யார் என்றும் கேள்வி எழுப்புகின்றார்கள்.

மேலும் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக, பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். பாஜக புதிதாக காலடித்தடம் பதித்திருக்கும் மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பாஜக பிரதிநிதிகளுடனும் தீவிர ஆலோசனையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 44 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒரு புதிய பாதையை அம்மாநிலத்தில் உருவாக்கியுள்ளது பாஜக என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மோடி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, கமலுக்கும் அழைப்பு இல்லை…

கூட்டணிக் கட்சியினருக்கான வாய்ப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி, அகாலி தளம் மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு பதவிகள் கிடைக்குமா என்று அனைவரும் பலத்த் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை பதிவு செய்தவர்கள்

உத்திரப் பிரதேசம் அமேதியில் ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வென்றுள்ளார். எனவே அவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்த சுஷ்மா ஸ்வராஜூக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. இரண்டு அவைகளிலும் அவர் தற்போது உறுப்பினர் இல்லை என்பதால் அவருக்கு இம்முறை அமைச்சராவதற்கான வாய்ப்புகள் இல்லை.

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முகுல் ராய்க்கு ஒரு பதவி கிடைக்கலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் அம்மாநிலத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்தவர்களில் மிக முக்கியமானவர்.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இருப்பவர்கள்

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் விழாவில் 6000 முக்கிய நபர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுவே ஒரு வகையில் தனி சாதனை தான்.
பிம்ஸ்டெட் நாடுகளான க்ரிகிஸ் குடியரசு, மொரிசியஸ் தீவுகளில் இருந்து நாட்டின் தலைமைகள் வரவுள்ளனர். பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், மாநில முதல்வர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் இம்முறை பங்கேற்க உள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகம், வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத், இலங்கை குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன, க்ரிகிஸ் குடியரசுத் தலைவர் சூரோன்பேய் ஜீன்பெக்கோ, மியான்மர் குடியரசுத் தலைவர் யூ வின் மிண்ட், மொரிசீயஸ் பிரதமர் ப்ரவிந்த் குமார், நேபாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோடாய் டிஷாரிங், தாய்லாந்தின் விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் க்ரிசாடா பூன்ராச் ஆகியோர் விழாவில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளது.

ராம்நாத் கோவிந்த் தலைமையில் முதலில் தேநீர் விருந்து நடைபெறும். பின்னர் 48 மணி நேரம் சமைக்கப்பட்ட தால் ரைசினா பரிமாறப்படும். இந்த உணவு செவ்வாய் கிழமை இரவு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வுகள் அடிக்கடி தர்பார் அரங்கில் தான் நடைபெறும். வாஜ்பாய் மற்றும் சந்திரசேகர் இருவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டனர். நேரு முதல் முறையாக பொறுப்பேற்கும் போது தர்பார் அரங்கில் தான் அவ்விழா நடைபெற்றது. 500 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதால் தற்போது அங்கு இது போன்ற பதவி ஏற்பு விழாக்கள் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபோகம் என்று குறிப்பிடப்படும் லெமன் டார்ட், சான்விச், சமோசா போன்றவை தேநீர் விருந்தில், விருந்தினர்களுக்கு கொடுத்து உபசரிப்பு விழா நடைபெறும். விருந்தினர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சைவ மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராம் நாத் கோவிந்தின் செய்தித்தொடர்பு செயலாளர் அசோக் மாலிக் அறிவிக்கையில், இந்திய வரலாற்றில், குடியரசுத் தலைவர் மாளிகை இவ்வளவு பெரிய அளவில் ஒரு விழாவினை நடத்துவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.

இது குறித்த முழுமையான தகவல்களை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm modi gandhinagar mp amit shah meeting sets stage for govt formation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X