சாதிவாரி கணக்கெடுப்புக்கான ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி, “சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் விரும்புகிறதா?” என்று கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸால் நாகர்னார் எஃகு ஆலையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பந்த் அறிவிக்கப்பட்ட போதிலும், பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூர் நகரில் மோடியின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi hits back at Rahul Gandhi demand for caste census: ‘Does Congress want to take away rights of minorities?’
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிய காங்கிரஸை குறிவைத்து, சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க விரும்புகிறதா காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தின் சாதி கணக்கெடுப்பைப் பாராட்டினார். நாட்டில் மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்க சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்று திங்கள்கிழமை கூறினார்.
ராகுல் காந்தியின் பேச்சு குறித்து மோடி கூறியதாவது: காங்கிரஸ் நேற்று ஒரு புதிய கோஷத்தை ஆரம்பித்தது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உரிமைகள் இருக்க வேண்டும் என்கிறார் அவர்களின் தலைவர். நான் சொல்கிறேன், பெரிய மக்கள் தொகை ஏழைகள், என்னைப் பொறுத்தவரை, ஏழை மக்கள் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ளனர், அவர்களின் நலனே எனது நோக்கம்.” என்று கூறினார்.
மேலும், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்; இந்தியாவின் வளங்கள் மீதான முதல் உரிமை சிறுபான்மையினருக்கே, அதுவும் முஸ்லீம்களுக்கே என்று அவர் கூறுவார். இப்போது காங்கிரஸ் கூறுகிறது, ஒருவருக்கு வளங்கள் மீது எவ்வளவு உரிமை உள்ளது என்பதை மக்கள்தொகை தீர்மானிக்கும். அப்படியென்றால் அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை குறைக்க விரும்புகிறார்களா? அப்போது யாருடைய உரிமை முதலில் இருக்கும்? யாருடைய மக்கள் தொகை அதிகம்? இதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். இந்துக்கள் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டுமா? அவர்கள் இந்துக்களை பிரித்து நம் நாட்டை அழிக்க நினைக்கிறார்கள்.
அவர்கள் ஏழைகளைப் பிரிக்க விரும்புகிறார்கள். 10 ஆண்டுகளாக, ஏழைகளின் தன்னம்பிக்கையை வளர்க்க மோடி திட்டங்களை வகுத்தார். ஏழைகள்தான் மிகப்பெரிய சாதி மற்றும் சமூகம். ஏழைகள் பயன் அடைந்தால், நாடு முழுவதும் பயன்பெறும்” என்று மோடி கூறினார்.
காங்கிரஸை அந்நியர்கள் நடத்துகிறார்கள் என்று மோடி குற்றம் சாட்டினார். “காங்கிரஸ் கட்சி காங்கிரஸால் நடத்தப்படவில்லை, அது அந்நியர்களால் நடத்தப்படுகிறது என்பதை நான் மீண்டும் சொல்கிறேன். அவர்களின் பெரிய தலைவர்கள் வாயை மூடிக் கொண்டார்கள் அல்லது பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் இந்திய எதிர்ப்பு மக்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். வேறு நாட்டுடன் என்ன ரகசிய ஒப்பந்தம் வைத்துள்ளனர் என்பதை காங்கிரஸ் இதுவரை வெளியிடவில்லை. அவர்களின் சதிக்கு எதிராக நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் (காங்கிரஸ்) உரிமைகள் பற்றி பேச விரும்பினால், இந்த நாட்டின் கனிமங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான முதல் உரிமை ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான்” என்று அவர் கூறினார்.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸால் நாகர்னார் எஃகு ஆலை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பந்த் அறிவிக்கப்பட்ட போதிலும், பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூர் நகரில் மோடியின் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகர்னார் உருக்கு ஆலையின் ஒரே உரிமையாளர்களாக பஸ்தார் மக்கள் இருப்பார்கள் என்றும், தங்கள் சொந்த மக்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை மேம்படுத்துவதற்காக அதை திருட காங்கிரஸ் விரும்புகிறது என்றும் மோடி கூறினார். “எஃகு ஆலை சுமார் 55,000 வேலைகளைக் கொண்டுவரும், மேலும் ஆயிரக்கணக்கான கோடிகளை அதில் முதலீடு செய்வோம். அதிக முதலீடு செய்யப்படும் போது, தொழிற்சாலை பெரியதாகவும், வளர்ச்சி வேகமாகவும் இருக்கும்” என்று மோடி கூறினார்.
அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது குறித்து அவர் கூறியதாவது: எங்கு பார்த்தாலும் ஊழல், கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு இடையே அதிக கொலைகளை பதிவு செய்வதில் போட்டி நிலவி வருவதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தலைவர்களின் பேனர்கள் மற்றும் லாக்கர்களில் மட்டுமே வளர்ச்சி காணப்படுகிறது” என்று மோடி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“