இந்திய ராணுவத்தில் பெண்கள் வலிமையை உயர்த்துவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கார்கிலில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும் போது, அதன் எல்லை பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், சமூகம் நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, 1999 மோதலுக்குப் பிறகு எல்லைப் பகுதிக்கு தனது பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, “கார்கில், நமது ஆயுதப் படைகள் பயங்கரவாதத்தின் பகுதிகளை நசுக்கியது, அப்போது கொண்டாடப்பட்ட தீபாவளியை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
என்னுடைய கடமைதான் என்னை அப்போது கார்கிலுக்கு அழைத்து வந்தது. வெற்றியின் ஓசைகள் எங்கும் எதிரொலித்த அந்தக் காலத்தின் நினைவுகள் ஏராளம்.
இந்தியாவின் பலம் உயரும் போது, அது உலக அமைதி மற்றும் செழுமைக்கான வாய்ப்பையும் கொடுக்கிறது” என்றார்.
மேலும், ஊழலுக்கு எதிரான தீர்க்கமான போர் நடந்து கொண்டிருக்கிறது, ஊழல்வாதிகள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள்.
‘ஆத்மநிர்பர் பாரத்’ நாட்டின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான அம்சமாகும். "வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளில் நமது சார்பு குறைவாக இருக்க வேண்டும்.
பல தசாப்தங்களாக ஆயுதப் படைகளில் தேவைப்பட்ட சீர்திருத்தங்கள் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாங்கள் ஒருபோதும் போரை முதல் விருப்பமாக கருதவில்லை.
அது கடைசி விருப்பம் ஆகும். ஏனெனில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.
ஆனால் வலிமை இல்லாமல் அமைதி சாத்தியமில்லை” என்றார். தொடர்ந்து, இந்திய ராணுவத்தில் பெண்கள் தங்களின் வலிமையை உணர்த்துவார்கள்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil