Advertisment

‘எல்லா சூழ்நிலையிலும் இந்தியாவின் நண்பர் ரஷ்யா; நம்பகமான கூட்டாளி’; புதினைப் பாராட்டிய மோடி

இரு நாடுகளுக்கு இடையே பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவில் 2 புதிய இந்திய துணை தூதரகங்களை திறப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
Modi russia 1

மாஸ்கோ: ஜூலை 9, 2024, செவ்வாய்கிழமை, மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். (PTI Photo)

மாஸ்கோவில் செவ்வாய்க் கிழமை காலை நடந்த ஒரு சமூக நிகழ்வில் ரஷ்யாவை நம்பகமான நட்பு நாடு என்றும் அனைத்து சூழ்நிலையிலும் நண்பர் என்றும் விவரித்த பிரதமர் நரேந்திர மோடி, பயணம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ரஷ்யாவில் 2 புதிய இந்திய துணை தூதரகங்களை - கசான் மற்றும் யெகாடெரின்பர்க்கில் - திறப்பதாக அறிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: In Moscow, PM Modi calls Russia India’s ‘all-weather friend’, ‘trusted ally’, hails Putin’s leadership

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, கடந்த இருபதாண்டுகளாக இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் அதிபர் விளாடிமிர் புதினின் தலைமைத்துவத்தை புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே பேசியபோது பாராட்டினார். “ரஷ்யா என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ஒவ்வொரு இந்தியரின் நினைவுக்கு வரும் முதல் வார்த்தை இந்தியாவின்  ‘சுக்-துக் கா சாத்தி’ (எல்லா சூழ்நிலையிலும் நண்பர்) மற்றும்  ‘பரோஸ்மண்ட் தோஸ்த்’ (நம்பகமான நட்பு நாடு) என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், “ரஷ்யாவில் குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸுக்கு (பூஜ்ஜிய டிகிரி செல்சியஸ்) கீழே எவ்வளவு குறைந்தாலும், இந்தியா-ரஷ்யா நட்பு எப்போதும் 'பிளஸ்' ஆக இருந்து வருகிறது, அது அரவணைப்பு நிறைந்தது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தில் இந்த உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று மோடி கூறினார். இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகம் நீண்ட காலமாக செல்வாக்கு சார்ந்த உலகளாவிய ஒழுங்கை கண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.  “ஆனால், உலகிற்கு இப்போது தேவைப்படுவது சங்கமம், செல்வாக்கு அல்ல, சங்கமங்களை வழிபடும் வலுவான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியாவைவிட இந்த செய்தியை யாராலும் சிறப்பாக வழங்க முடியாது” என்று மோடி கூறினார். இந்தியாவும் ரஷ்யாவும் சென்னை - விளாடிவோஸ்டாக் கிழக்கு கடல்வழி பாதையில் செயல்பட்டு வருவதாகவும், கங்கை - வால்கா உரையாடல் மூலம் இரு நாடுகளும் ஒருவரையொருவர் கண்டுபிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் இருந்து முதல் வணிகச் சரக்கு கப்பல் இங்கு வந்தடைந்தது... இப்போது, ​​சென்னை - விளாடிவோஸ்டாக் கிழக்கு கடல்வழிப் பாதையிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கங்ககை - வால்கா உரையாடல் மற்றும் நாகரீகம் மூலம் நமது இரு நாடுகளும் ஒன்றையொன்று கண்டுபிடித்து வருகின்றன” என்று பிரதமர் மோடி தனது 40 நிமிட உரையில் கூறினார்.

மூன்றாவது முறை தனது அரசாங்கத்தின் திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தினார், இந்தியா ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கூறினார்.

 “இன்றைய இந்தியா 2014-க்கு முந்தைய சூழ்நிலையைப் போல இல்லாமல், தன்னம்பிக்கை நிரம்பியுள்ளது, இதுவே நமது மிகப்பெரிய மூலதனம்” என்று மோடி மாஸ்கோவில் மேடையில் இருந்து முந்தைய ஆட்சிகளைத் தாக்கினார்.  “உங்களைப் போன்றவர்கள் எங்களை ஆசீர்வதித்தால், மிகப்பெரிய இலக்குகளைக்கூட அடைய முடியும். இன்றைய இந்தியா எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அதை அடைகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதாக மோடி கூறினார். அந்த நேரத்தில், நாட்டின் நோக்கங்களை நிறைவேற்ற 3 மடங்கு கடினமாகவும் வேகமாகவும் உழைக்கத் தீர்மானித்ததாகக் கூறினார்.

இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவது, ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டுவது, கிராமங்களில் உள்ள 3 கோடி ஏழைப் பெண்களை ‘லக்பதி தீதி’யாக (லட்சாதிபதி சகோதரிகளாக) மாற்ற வேண்டும் என்று எங்கள் அரசாங்கம் எண்ணுகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.

புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் முக்கிய நிலையை வலியுறுத்திய அவர், “இந்தியாவின் வளர்ந்து வரும் திறன் முழு உலகிற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான நம்பிக்கையை அளித்துள்ளது. புதிய, வளர்ந்து வரும், பலமுனை, உலக ஒழுங்கின் வலுவான தூணாக இந்தியா பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு நாடும் நெருக்கடியை சந்திக்கும் போது முதலில் உதவி செய்யும் நாடு இந்தியா என்று பிரதமர் மோடி கூறினார். “அமைதி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் பற்றி இந்தியா பேசும்போது, ​​உலகம் முழுவதும் கேட்கிறது. உலகம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம், அங்கு சென்றடையும் முதல் நாடு இந்தியாதான்” என்று நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment