‘Howdy, Modi’ updates: பிரதமர் மோடி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றுகிறார்.
மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்ட பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள இந்தியர்களிடம் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி மோடியை நட்புடன் வரவேற்கும் விதமாக ஹவ்டி மோடி என்று தலைப்பிட்டு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வு இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலப்படுவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மோடியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர்கள் நடத்தும் நிகழ்வில் வேறொரு நாட்டின் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ஒன்றாக கலந்துகொளவது என்பது அரிதானது. அதனால், இந்த நிகழ்ச்சியை உலக நாடுகள் கவனித்து வருகிறது.
ஹூஸ்டனில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.
Live Blog
Howdy Modi even in US at Houston, ஹவ்டி மோடி நிகழ்ச்சி, ஹூஸ்டனில் பிரதமர் மோடிபங்கேற்கும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியைக் காண இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.
ஹவ்டி, மோடி' நிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோர்கள் இடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியின் தலைமையில் உலகம் ஒரு வலுவான, செழிப்பான மற்றும் இறையாண்மை கொண்ட இந்தியாவை காண்கிறது என்று கூறினார். "இன்று எங்கள் உறவு முன்பை விட வலிமையடைந்துள்ளது. நாங்கள் ஜனநாயகத்திற்கான உறுதிப்பாட்டில் அடித்தளமாக இருக்கிறோம் என்று கூறினார்.
பிரதமர் மோடி: நள்ளிரவு என்றாலும், இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் தொலைக்காடிகளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு டிரம்ப் உங்களுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று நான் உங்களுக்கு என்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்துவைப்பதில் பெருமைப்படுகிறேன்.
வரவிருக்கும் அமெரிக்க தேர்தலுக்கு டிரம்பிற்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஆப்கி பார் மோடி சர்க்கார்” என்றார். அதிபர் டிரம்ப்பின் தலைமைத்துவ உணர்வு, அமெரிக்கா மீதான அவருடைய ஆர்வம் மற்றும் அவர் ஒவ்வொரு அமெரிக்கர்களிடமும் அக்கறை காட்டுவதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்ற பிரதமர் மோடி: அவர் மிகவும் சிறப்பான மனிதர். அது எனக்கான கௌரவம். இந்த மாபெரும் கூட்டத்தில் டிரம்ப்பை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் டிரம்ப்பை சந்திக்கும் போது அவருடைய நட்பி இதமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் ஹூஸ்டன் நகர மேயர் சில்வெஸ்டர் டர்னர் பிரதமர் மோடியை வரவேற்று பேசினார். இந்திய பிரதமர் மோடியை வரவேற்கிறேன். ஹூஸ்டனில் ஹவ்டி மோடி என்று சொல்லி கௌரவிக்கிறேன். இந்த நகரின் வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
எம்.இ.ஏ செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டரில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் 50,000 இந்திய அமெரிக்கர்கள் குவிந்துள்ளனர். மோடியும் டிரம்பும் பேசும் வரலாற்று நிகழ்வுக்காக காத்திருக்கின்றனர். என்று குறிப்பிட்டுள்ளார்.
That’s a Texas-sized crowd!
Electric atmosphere at the NRG arena in Houston as 50,000 strong Indian Americans wait for the historic occasion when PM @narendramodi comes on stage together with US President @realDonaldTrump at #HowdyModi. pic.twitter.com/upJj4pHphr
— Raveesh Kumar (@MEAIndia) September 22, 2019
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, வீடியோவில்,ஹூஸ்டன் அற்புத அன்புக்கு நன்றி என்றுதெரிவித்துள்ளார்.
Thank you Houston for such amazing affection! #HowdyModi pic.twitter.com/xlbWsMVkae
— PMO India (@PMOIndia) September 22, 2019
டெக்ஸாஸ் மாகான செனட்டர் டெட் குருஸ்: உலகில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. அமெரிக்கா உங்களுடைய நண்பனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் உள்பட இன்று இந்திய அமெரிக்கர்களின் கொண்டாட்டம். உங்களுடைய வியக்கத்தக்க பங்களிப்புகளுக்காக நன்றி
ஹவ்டி மோடி நிகச்சி நடைபெறும் மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி
#WATCH Prime Minister Narendra Modi arrives on stage at NRG stadium in Houston, he will address the gathering shortly. #HowdyModi pic.twitter.com/qhsbQr6Dtx
— ANI (@ANI) September 22, 2019
நிச்சயமாக இது மிகப்பெரிய நாள், நான் உங்களை விரைவில் வந்து சந்திக்க உள்ளேன். என்று பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
It surely will be a great day! Looking forward to meeting you very soon @realDonaldTrump. https://t.co/BSum4VyeFI
— Narendra Modi (@narendramodi) September 22, 2019
ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி. ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் சிறிது நேரத்தில் வர உள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் விதமாக பாங்ரா கலைஞர்களின் பாங்ரா நடனம் நடைபெறுகிறது.
#WATCH Bhangra artistes perform at #HowdyModi event in Houston, Texas. PM Narendra Modi and President Donald Trump to arrive shortly. pic.twitter.com/6s8Tq7r4fs
— ANI (@ANI) September 22, 2019
ஹூஸ்டன் நகரில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். அவர்களை வரவேற்கும்விதமாக ஹூஸ்டன் நகரின் என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் 27 கலைக்குழுக்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹூஸ்டனுக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: "நாம் ஹூஸ்டனுக்கு இருப்போம். நாம் அங்கே மோடியுடன் மக்கள் நிறைந்த மிகப்பெரிய ஸ்டேடியத்தில் இருப்போம். நான் அவருடன் செல்வதற்கு மோடி கேட்டார். நானும் ஒத்துக்கொண்டேன். நாங்கள் ஒரு நல்ல காலத்துக்காக போய்க்கொண்டிருக்கிறோம். நான் இங்கே ஒரு மிகப்பெரிய கூட்டத்தின் ஆரவாரத்தைக் கேட்கிறேன்" என்று கூறினார்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடி ஹவ்டி மோடி என்ற நிகழ்வில் இந்திய வம்சாவழி மக்களிடம் பேசுகிறார். அவருடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டிரம்ப் ஹூஸ்டனுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி இன்று ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற எரிசக்தி துறையின் சி.இ.ஓ-க்கள் கூட்டத்திலும், எண்ணெய் நிறுவன முதன்மை செயல்தலைவர்களின் கூட்டத்திலும் பங்கேற்றார். ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்று பேச உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights