கடலையும் தீவுகளையும் சித்தரிக்கும் சிப்பி வடிவ வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் கட்டடக்கலை இயற்கை அழகுடன் கட்டப்பட்டுள்ளது.
Advertisment
போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
கடலையும் தீவுகளையும் சித்தரிக்கும் சிப்பி வடிவ கட்டடமாக அமைக்கப்பட்டுள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் கட்டடக்கலை இயற்கையால் ஈர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தில் நிலத்தடி நீர் தொட்டியில் மழைநீர் சேகரிப்பு, ஆன்-சைட் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் 500 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையம் ஆகியவை முனைய கட்டடத்தின் மற்ற சில அம்சங்களாக உள்ளன. (புகைப்படம்: PIB)
இந்த விமான நிலையத்தின் வடிவமைப்பு தீவின் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு கட்டமைக்கப்பட்டது; சில நிலைத்தன்மை அம்சங்களில் வெப்ப அதிகரிப்பைக் குறைக்க கட்டடத்தின் உள்ளே இரட்டை தனிமைப்படுத்தப்பட்ட கூரை அமைப்பு மற்றும் செயற்கை ஒளி பயன்பாட்டைக் குறைக்க பகல் நேரத்தில் அதிக அளவு இயற்கை சூரிய ஒளியை வழங்குவதற்கான ஸ்கைலைட்கள் ஆகியவை உள்ளன.
விமான நிலையம் இயற்கைச் சூழலில் அமைந்த கட்டடக்கலை வடிவமைப்பு கடலையும் தீவுகளையும் சித்தரிக்கும் சிப்பி வடிவ அமைப்பை ஒத்திருக்கிறது.
சுமார் 710 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் தீவின் இணைப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த முனையம் சுமார் 40,800 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"