மலைகளுக்கு மத்தியில் அமைந்த இந்தியாவின் 100வது விமான நிலையம் - அக். 4 முதல் விமான சேவை தொடக்கம்

வரலாற்று சிறப்புமிக்க சாதனையை தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்துள்ளனர் என திறப்பு விழாவில் மோடி புகழாரம்.

100வது விமான நிலையம் :  சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக இன்று பிரதமர் நரேந்திர மோடி பக்யோங் சென்றார். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இதுவாகும். இமாலய மலைத் தொடர்களின் மத்தியில் இந்த விமான நிலையம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ப்ரதான் மந்திரி ஜான் ஆரோக்யா யோஜனா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு நேற்று மாலை காங்க்டாக் சென்றார் நரேந்திர மோடி.

இந்தியாவின் 100வது விமான நிலையம்

இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நூறாவது விமான நிலையம் இது. இது குறித்து மோடி பேசுகையில் “சிக்கிமின் அழகிற்காக மட்டும் இந்த விமான நிலையம் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் பொறியியல் துறைக்கும் சேர்த்து சமர்பிக்கப்பட்ட ஒன்றாகும். நாடு நூறாவது விமான நிலையத்தை கண்டுள்ளது. இந்த விமான நிலையத்தை கட்டமைத்த வல்லுநர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இன்று தான் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. ஆனாலும் சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருக்கும் 100 விமான நிலையங்களில் சுமார் 35 விமான நிலையங்கள் பாஜக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டது என்று மேற்கொள் காட்டினார் மோடி. வட கிழக்கு இந்தியாவில் நிறைய மாற்றங்களையும் திட்டங்களையும் எங்களின் மத்திய அரசு என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் உதவியுடன் 201 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. 50 வாகனங்களை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கு பார்க்கிங் வசதி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்திய விமானப்படை பல்வேறு போர் விமானங்களை இங்கே நிறுத்திக் கொள்வதற்கு வகையாக மற்றொரு ரன் வேயினை 75 மீட்டர் நீளத்திற்கு அதே விமான நிலையத்தினுள் அமைத்துள்ளனர். முதல் விமான போக்குவரத்து அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆரம்பிக்க உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close