அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய் 93 கோடி மதிப்பில் நவீன மயமாக்கும் திட்டத்தை பிரதமர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
Advertisment
நாடு முழுவதும் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள் ரூபாய் 25 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவை ரயில் நிலையம் ரூ.93 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ராவ்சாகப் பாட்டில் தானாவே, தர்ஷனா ஜர்தோஸ் ஆகியோர் பங்கேற்றனர். புதுவை ரயில் நிலையத்தில் பிரதமரின் காணொலி காட்சி திரையிடப்பட்டது. புதுவை ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, வி.பி.ராமலிங்கம், அசோக் பாபு, பா.ஜ.தா.மாநில தலைவர் சாமிநாதன், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ரெயிவே அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுவை ரயில் நிலையம் பழமை மாறாமல் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதன்படி புதுவை ரயில் நிலைய கட்டிடஙகள் தரம் உயர்த்தப்பட்டு கூரை பிளாசா, வணிக மேண்டலம், உணவகம், சிறுவர் விளையாட்டு வதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக தனித்தனி நுழைவு மேற்றும் வெளியேறும் வழி, வாகன நிறுத்தும் இடம், நகரும் படிக்கட்டு, டிராவலேட்டர், மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil