pm modi independence day speech 74th Independence Day : இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா அமைதியாக நடைபெற்றது.கொரோனா காரணமாக சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன.
Advertisment
டெல்லி செங்கோட்டைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. பின்னர் செங்கோட்டைக்கு வருகை தந்த மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.
7-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றும் பிரதமர் மோடி, தலைப்பாகை அணிந்தபடி சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. விழாவில் பங்கேற்ற மிக மிக முக்கிய பிரமுகர்களும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். கையை சுத்தப்படுத்திக் கொள்ள விழா நடைபெறும் பகுதியில் ஆங்காங்கே கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மோடி நேரலை:
தேசிய கொடியை ஏற்றிய பின்பு, மோடி நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “ கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி . நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரம்மாண்டமாக இருக்கும் . இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம் . இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர் .
நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளன, அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது. இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும். உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும் . இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன.
இளைஞர்கள் 20 வயது ஆனாலே சொந்த காலில் நிற்க வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இந்தியா சொந்த காலில் நிற்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியுடன், மனிதத் தன்மையும் மையமாக வைத்து நாம் செயல்பட வேண்டும்.
பழமொழிகள், பல பிராந்தியங்களிலும் ஒற்றுமையாக போராடியதால் தான் சுதந்திரம் பெற முடிந்தது. உலகை வழிநடத்த கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். நமது விவசாயத் துறையின் கட்டமைப்பை தரமுயர்த்த வேண்டியுள்ளது. இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் எந்த ஒரு பகுதியும் பின்தங்கி விடக்கூடாது.
உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதே இனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. கரோனா தடுப்பது மருந்து தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ”
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil