இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். கச்சத்தீவு தீவு இலங்கைக்கு எப்படி தாரை வார்க்கப்பட்டது என்பது குறித்து பெற்ற ஆர்.டி.ஐ தகவலையும் மோடி கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு எப்படி இலங்கை வசம் சென்றது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் திடீரென தகவல் கோரி விண்ணப்பித்திருந்தார். இதன் மூலம் பெற்ற தகவலை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து காங்கிரஸை குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில், "கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விஷயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் மற்றொரு விஷயம்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது" என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“