2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூருக்கு மோடி பயணம்: இருதரப்பு மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி இந்த மாதம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 13-14 தேதிகளில் அசாம் மற்றும் மிசோரம் பயணத்தின் போது அவர் மணிப்பூருக்கு வர வாய்ப்புள்ளது.

மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி இந்த மாதம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 13-14 தேதிகளில் அசாம் மற்றும் மிசோரம் பயணத்தின் போது அவர் மணிப்பூருக்கு வர வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
pm modi

விரைவில் மணிப்பூருக்கு மோடி பயணம்: இருதரப்பு மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

மணிப்பூரில், இனக்கலவரம் வெடித்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் மாநிலத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்.13-14 தேதிகளில் அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பிரதமர், மணிப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "பிரதமரின் மணிப்பூர் பயணம் உறுதியானது. ஆனால், சரியான தேதியை இப்போதே கூற முடியாது. பல காரணிகளை கருத்தில் கொண்ட பிறகே இறுதி அறிவிப்பு வெளியாகும்" என மணிப்பூரில் உள்ள நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கலவையான எதிர்வினைகள் & எதிர்ப்பின் விமர்சனம்

Advertisment

குக்கி சமூகத்தின் எதிர்பார்ப்பு: குக்கி-ஜோ கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கின்சா வுவல்சாங், பிரதமர் குக்கி சமூகத் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வார் என நம்புவதாகக் கூறினார். மேலும், மோடி நிவாரண முகாம்களுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களின் துயரங்களைக் கண்டறிவார் என எதிர்பார்க்கிறார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

மெய்டி அமைப்புகளின் கருத்து: இம்பாலைச் சேர்ந்த மெய்டி சிவில் சமூக அமைப்பான COCOMI-ன் ஆலோசகர் ஜீதேந்திர நிங்கோம்பா, பிரதமரின் பயணம் அமைதி அல்லது தீர்வை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: வன்முறை தொடங்கியதிலிருந்து இதுவரை பிரதமர் மணிப்பூருக்கு செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் 'மிகக் குறைவு, மிகத் தாமதம்' (too little too late) என விமர்சித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முக்கிய இடங்கள்

Advertisment
Advertisements

பிரதமரின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில், மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 'முன்னெற்பாடு கூட்டம்' நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இம்பாலில் உள்ள பாரம்பரியமான காங்லா கோட்டை மற்றும் சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானம் ஆகிய 2 இடங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இம்பால் மெய்டி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி; சுராசந்த்பூர் குக்கி மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம். இதேபோல், செப்டம்பர் 7 முதல் 14 வரை எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் விடுமுறை இல்லை என மணிப்பூர் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்பார்ப்புகள்

மணிப்பூரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் அமைக்குமாறு கோரிக்கை வலுத்து வருகிறது. முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் உள்ளிட்டோரும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, புதிய அரசு அமைப்பது பற்றியும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் பற்றியும் அறிவிப்பு வெளியாகும் என எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு அமைதியை நிலைநாட்டுவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாக, பாஜக எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் தோங்காம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அதிகாரிகளும், பிரதமரின் இந்த பயணத் திட்டம் கடந்த ஓராண்டாகவே தயாராகி வருவதாகவும், பலமுறை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இருதரப்பு மக்களையும் சந்தித்து உரையாற்றுவதுடன், நிவாரண முகாம்களுக்கும் அவர் செல்ல வாய்ப்புள்ளது.

வன்முறை அதிகரித்திருந்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வரவில்லை என்றும், தற்போது மாநிலத்தில் அமைதி திரும்பி இருப்பதால், பேச்சுவார்த்தைகள் தொடரும் இச்சூழலில் பிரதமரின் வருகை பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பிரதமரின் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: