உத்தர்காண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக்கருத்தாக கொண்டு, பிரிட்டன் முன்னாள் ராணுவ வீரர் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி, இன்று ( 12ம் தேதி) இரவு ஒளிபரப்பாகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக, ஜிம் கார்பெட் பூங்காவில், மோடி, பேர் கிரில்சுடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகளில் ஆர்வம் கொண்ட மக்கள், இன்று ( 12ம் தேதி) இரவு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் நிகழ்ச்சியில் என்னுடன் இணைந்திருங்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பேர் கிரில்ஸ், நாம் வாழும் பூமியை பாதுகாப்பது, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களுக்காக இந்திய பிரதமர் மோடியுடன் நான் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி, டிஸ்கவரி இந்தியா சேனலில் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளதாக கிரில்ஸ் பதிவிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சி, இந்தியாவில் ஒளிபரப்பாகும் 12 டிஸ்கவரி சேனல்களில் மட்டுமின்றி சர்வதேச அளவில் 180 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஷூட் செய்போது திரைக்கு பின்னால் க்ரில்ஸ், மோடிக்கு இடையே நடந்த உரையாடல்கள், சாகஸங்களின் பின்னணியில் நடந்த சம்பவங்களின் வீடியோ பெரும்வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வெற்றி பெறும் : வெளியாட்கள் யாரும் இந்தியாவை சுத்தம் செய்ய முடியாது. இந்திய மக்கள் தான் தங்களின் தேசத்தை சுத்தப்படுத்த வேண்டும். தனி நபர் சுத்தம் என்பது இந்திய மக்களின் கலாச்சாரத்திலேயே உள்ளது. ஆனால் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தை நாம் ஏன் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக மகாத்மா காந்தி நிறைய செய்துள்ளார். அவர் வழியில் சென்று நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் இந்தியா வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.