பிரதமர் மோடி இன்று தனது 'மன் கி பாத்' உரையின் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏழை மக்களை பாதித்துள்ளதை தானும் உணர்கிறேன் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மனதில் குரல் என்ற பெயரில், வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா என்ற வைரஸ் எதிர்த்து போராடும், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற, கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள் என்று கேட்டுக்கொண்ட பிரதமர், மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில், கொரோனா தடுப்பு பெரும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்தார். எனவே, மக்கள் தனித்திருக்காவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையை, கொரோனா உருவாக்கி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இன்றைய மன் கி பாத் உரையின் சிறப்பம்சங்கள்:
நாம் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19 வைரஸை வீழ்த்துவோம். உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கவே லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Corona Updates Live: கொரோனா குறித்த செய்திகளை உடனுக்குடன் பெற...
கோவிட்-19க்கு எதிரான போர் மிகவும் சிரமமானது. இதற்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்தியர்களின் நலனை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். காலத்தின் சூழலுக்கு ஏற்ப இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம்.
ஏராளமான வீரர்கள் (“warriors” and “soldiers”) கொரோனா வைரஸிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு உள்ளே அல்ல; வெளியே. அதாவது நமது நலனைக் காக்க செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர்.
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. லாக் டவுன் உத்தரவை வேண்டுமென்றே யாரும் உடைக்கவில்லை. ஆனால் சிலர் செய்கின்றனர். அவர்களுக்கு நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், லாக் டவுன் உத்தரவை முறையாக பின்பற்றாவிட்டால் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் சிரமம்.
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் சிறை பிடித்துள்ளது. ஆற்றல், அதிகாரம், ஏழை, பணக்காரன், அறிவியல், அறிவு என எல்லாவற்றுக்கும் சவால் விடுத்து வருகிறது. நாட்டின் எல்லைகளைக் கடந்து காலநிலை வேறுபாடின்றி வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சமூக விலகல் என்பது உணர்வுப் பூர்வமாக விலகி இருப்பது அல்ல. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பலரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அவர்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
ஆபத்தில் துணை நிற்பது பொது சுகாதாரத் துறையே: கொரோனா கூறும் பாடங்கள்
சிறு கடைக்காரர்கள், ஓட்டுநர்கள், வங்கித் தொழிலாளர்கள், ஈ-காமர்ஸ் டெலிவரி நபர்கள் மற்றும் இணைய சேவையை இயக்கும் ஐ.டி தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பணிகளையும் மோடி பாராட்டினார்.
“இன்று, ஒவ்வொரு இந்தியனும் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள் தங்கியிருக்கிறார். ஆனால், வரவிருக்கும் காலத்தில், இந்த இந்தியர்கள் தனது நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து தடைகளையும் உடைப்பார். அடுத்த மாதம் மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியில் சந்திப்போம், அதற்குள் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்றிருப்போம்" என்று அவர் முடித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்த செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil