modi at Kedarnath : ஆன்மிக பயணமாக உத்தரகாண்ட் பகுதியிலுள்ள கேதர்நாத் ஆலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி இரவு முழுவதும் தொடர் தியானத்தை முடிவு விட்டு இன்று காலை வெளியே வந்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 2 மாத காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த பிரதமர் மோடி ஆன்மிக பயணமாக நேற்று முன் தினம் உத்தரகாண்ட் பகுதியிலுள்ள கேதர்நாத் ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இடுப்பில் காவி துண்டை கட்டியபடி கையில் தடியுடன் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மக்களின் பாரம்பரிய உடையை அணிந்தப்படி கோயிலுக்குள் சென்றார். மோடியின் வருகையொட்டி அங்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலைச் சுற்றி வலம் வந்த மோடி பின் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அப்பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் பற்றியும் ஆலோசனை செய்தார். குறிப்பாக மோடி அணிந்திருந்த உடை அங்கிருந்த மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
பின்பு, மோடி பனிக்குகை ஒன்றினுள் சென்று தியானம் செய்ய தொடங்கினார். அந்த குகையில் மோடிக்காக ஏற்கனவே மெத்தை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தனர். தியானத்தை தொடங்கிய மோடி விடிய விடிய சுமார் 15 மணி நேரம் தொடர் தியானத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.இன்று காலை தியானத்தை முடித்து விட்டு வெளியே வந்த மோடி தீரென்று அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-20-300x169.jpg)
பதவி ஏற்ற காலத்தில் இருந்து மோடி செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்ப்பதாக, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இதுவரை பதில் கூறியதே இல்லை என்ற விமர்சனம் மோடி மீது அதிகம் வைக்கப்படும். இந்நிலையில் கேதர்நாத் ஆலயத்திற்கு சென்றுள்ள மோடி அங்கிருந்து நாட்டு மக்களுக்கு முக்கிய பேட்டி ஒன்றை அளித்தார்.
மோடி பேசியதாவது, “ நாட்டில் நடப்பதில் இருந்து விலகி, ஆன்மீக பயணமாக உத்தரகாண்ட் வந்துள்ளேன். எனக்காக எதையும் கேட்டு கோவிலுக்கு செல்வதில்லை. கேதர்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதர்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வான உறவு உள்ளது. கேதர்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். காணொலிக் காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன்.
மன அமைதி பெற கேதர்நாத்திற்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. இதோ இங்கிருந்து புறப்பட்டு பத்ரிநாத் செல்கிறேன்” என்று கூறினார்.
பேட்டியை முடித்து விட்டு அங்கிருந்த மக்களை பார்த்து மோடி உற்சாகமாக கைகளை அசைத்தார். மோடியை பார்த்த அங்கிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். மோடியின் இந்த ஆன்மிக பயணம் அவர் மீண்டும் பிரதமராக நடத்தப்பட்ட சிறப்பு பிராத்தனை என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றனர். பல்வேறு வகையான ஆலோசனைகள் மற்றும் பூஜைகளுக்கு பின்பு தான் மோடி இந்த ஆன்மிக பயணத்தை துவக்கியதாகவும் கூறப்படுகிறது.
இன்று பத்ரிநாத் செல்லும் மோடிக்கு அங்கும் சிறப்பு பூஜை ஒன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்படிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழிப்பாட்டுக்கு பின்னர் மோடி தனி விமானம மூலம் டெல்லி செல்கிறார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்று வருவது குறிப்பிடதக்கது.