Advertisment

நேரு முதல் ராஜீவ் வரை - அரசியலமைப்புக்கு பேரிடியை கொடுத்த காங்கிரஸ்: மக்களவையில் மோடி உரை

நேரு முதல் ராஜீவ் காந்தி வரை காங்கிரஸ் கட்சியினர் தான் அரசியலமைப்பிற்கு பேரிடியை கொடுத்தனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Modi speech

இன்றைய தினம் (டிச 14) நடைபெற்ற மக்களவை விவாத நேரத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் மீதும், நேரு குடும்பத்தினர் மீதும் சரமாரியாக கடுமையான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி முன்வைத்தார். குறிப்பாக, நேரு முதல் ராகுல் காந்தி வரை நான்கு தலைமுறையினரையும் மோடி விமர்சித்தார். அரசியலமைப்பை சீர்குலைக்கும் விதமான பாவத்தை காங்கிரஸ் செய்ததாக அவர் கூறினார்.

Advertisment

‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டு கால பயணம்’ என்ற தலைப்பில் மக்களவையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து மோடி உரையாற்றினார். சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றிய மோடி, தானும், தனது அரசும் அரசியலமைப்பின் படி செயலாற்றுவதாக கூறினார்.

நேரு குடும்பத்தினரை குறி வைத்து பிரதமர் மோடி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸாரால் அரசியலமைப்புக்கு பேரடி கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார். "தேர்ந்தெடுக்கப்படாத" நேரு அரசாங்கம் 1951 இல் "பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை குறைக்க அரசியலமைப்பை திருத்தியபோது அரசியலமைப்பின் முதல் அடியை நிறைவேற்றியது என அவர் குறிப்பிட்டார். 

"இரத்தத்தின் சுவையறிந்த அக்குடும்பத்தினரின் அனைத்து தலைமுறையினரும் அரசியலமைப்பை காயப்படுத்தினர்" என மோடி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மாறாக, தனது அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் அரசியலமைப்பின் பார்வைக்கு ஏற்ப, இந்தியாவின் வலிமை மற்றும் ஒற்றுமையை உயர்த்தும் நோக்கம் கொண்டது அவர் கூறினார்.

Advertisment
Advertisement

1951 இல் இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தம், 1975 இல் இந்திரா காந்தி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட அவசர நிலைச் சட்டம், 1986 இல் உச்ச நீதிமன்றத்தின் ஷா பானோ தீர்ப்பை ரத்து செய்ய ராஜீவ் காந்தி அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றியது போன்றவை காங்கிரஸ் கட்சியினரால் உருவானதாக கூறினார். இவ்வாறு, நேரு குடும்பத்தினரின் ஒவ்வொரு தலைமுறையும் அரசியலமைப்புக்கு எதிராக இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் முயன்றதாக மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் நலன் கருதி, மதம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அறிவுறுத்தினர் என்றும், அதிகாரத்தின் மீது கொண்ட பேராசை மற்றும் தனது வாக்கு வங்கியை திருப்திபடுத்த காங்கிரஸ் முயற்சி செய்யும் என மோடி கூறியுள்ளார்.

“நேரு முதல் ராஜீவ் காந்தி வரையிலான காங்கிரஸ் பிரதமர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்தனர். நேரு, இடஒதுக்கீட்டை புறக்கணித்து, முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கை பல தசாப்தங்களாக கிடப்பில் இருந்து, காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோதுதான் ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது“ என மோடி தெரிவித்துள்ளார்..

“இது காங்கிரஸின் பாவம்... முன்பு ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால்... அவர்கள் இப்போது நாட்டுக்காகப் பல பதவிகளை வகித்திருப்பார்கள். அவர்கள் (காங்கிரஸ்) இந்த பாவத்தை செய்தார்கள், ”என்று மோடி கூறினார்.

இதனிடையே, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான தனது உறுதிப்பாட்டை மோடி கூறினார். ஏற்கனவே இந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையின் போதும் மோடி இதனை தெரிவித்திருந்தார். தற்போதுள்ள வகுப்புவாத மற்றும் பாகுபாடு அல்லாமல், மதசார்பற்ற பொது சிவில் சட்டம் நோக்கி செல்ல வேண்டிய நேரம் என மோடி கூறியிருந்தார்.

சட்டப்பிரிவு 370 ரத்து, ஜிஎஸ்டி போன்ற பெரிய முடிவுகள் எல்லாம் நாட்டின் ஒற்றுமையை வளர்ப்பதற்காக தான் எடுக்கப்பட்டது என மோடி கூறியுள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Modi Loksabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment