Advertisment

உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? மோடியை தாக்கிய கார்கே

உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? எல்லா தேர்தல்களிலும் பார்க்கிறோம்… மோடியை தாக்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; குஜராத் மற்றும் குஜராத்தின் மகனை காங்கிரஸ் அவமானத்தியுள்ளதாக பா.ஜ.க கண்டனம்

author-image
WebDesk
New Update
உங்களிடம் ராவணன் போல் 100 தலைகள் உள்ளதா? மோடியை தாக்கிய கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, குஜராத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜ.க.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisment

ஒவ்வொரு தேர்தலுக்கும் மோடியை மட்டும் பெரிதும் நம்பியிருப்பதாக பா.ஜ.க.,வைத் தாக்கி, அகமதாபாத்தின் பெஹ்ராம்புராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, “மாநகராட்சித் தேர்தல்கள், எம்.எல்.ஏ தேர்தல்கள் அல்லது எம்.பி தேர்தல்கள் என எல்லா இடங்களிலும் உங்களின் (மோடியின்) முகத்தைப் பார்க்கிறோம்... உங்களிடம் ராவணன் போன்று 100 தலைகள் இருக்கிறதா?”, என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை கொச்சையானது என விமர்சித்த இஸ்ரேலிய இயக்குனர்; இஸ்ரேல் தூதர் கண்டனம்

கார்கே மேலும் கூறுகையில், “முனிசிபாலிட்டி தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் மோடிஜியின் பெயரில் வாக்குகள் கேட்கப்படுவதை நான் பார்த்து வருகிறேன்... வேட்பாளரின் பெயரில் ஓட்டு கேளுங்கள்... மோடி நகராட்சியில் வந்து வேலை செய்யப் போகிறாரா? உங்கள் தேவையின் போது அவர் உங்களுக்கு உதவப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கடுமையாக பதிலளித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அமித் மாளவியா, பிரதமரை காங்கிரஸ் கட்சி அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். “குஜராத் தேர்தலின் சூடு தாங்க முடியாமல், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது வார்த்தைகளில் கட்டுப்பாட்டை இழந்து, பிரதமர் நரேந்திர மோடியை “ராவணன்” என்று அழைக்கிறார். “மௌத் கா சவுதாகர்” முதல் “ராவணன்” வரை காங்கிரஸ் குஜராத்தையும் அதன் மகனையும் தொடர்ந்து அவமதித்து வருகிறது,” என்று கூறினார்.

கோத்ரா சம்பவத்துக்கும் குஜராத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்துக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என்று காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட பழைய பழமொழியை அமித் மாளவியா குறிப்பிடுகிறார்.

செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், கார்கேவின் கருத்துக்கள் "கண்டனத்திற்குரியவை" என்றும் "காங்கிரஸின் மனநிலையை" காட்டுவதாகவும் அமித் மாளவியா கூறினார். ”இது பிரதமர் மோடிக்கு மட்டும் அவமானம் அல்ல. இது ஒவ்வொரு குஜராத்காரர்களையும், குஜராத்தையும் அவமதிக்கும் செயலாகும்,” என்று அமித் மாளவியா கூறினார்.

பேரணியில் கார்கே மேலும் கூறுகையில், “குஜராத்தில் பா.ஜ.க வெற்றி பெறுவதாக நம்பினால், டெல்லியில் மத்திய அரசிற்காக உழைத்திருக்க வேண்டிய மோடிஜி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று குஜராத்தின் சந்துப் பகுதிகளுக்கும் சென்றிருக்க மாட்டார். மோடி குஜராத்தின் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று வருகிறார். அவர் போகிறார், அமித் ஷா போகிறார், 4-ஐந்து முதல்வர்கள் செல்கிறார்கள், 40க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் செல்கிறார்கள்... ஏனென்றால், மக்கள் தங்களுக்கு எதிரானவர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள், அதை அவர்களால் பார்க்க முடிகிறது...” என்றும் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Modi Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment