சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 ஆயிரத்து 276 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 236 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் - இதுவே நம் தாரக மந்திரம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது, மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது. 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது - மோடி
நாளை (மார்ச்.20) மாலை 4 மணிக்கு, கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களிடையே வீடியோ கான்ஃபரன்ஸிங் வாயிலாக பிரதமர் மோடி பேசுகிறார்.
.@PMOIndia @narendramodi will do a video conferencing meet at 4pm tomorrow with all state Chief Ministers #IndiaFightsCoronavirus
— Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) March 19, 2020
டெல்லியில் இதுவரை 10 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் குணமடைந்துள்ளனர். மீதி 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
டெல்லியில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் கூடத் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் உணவகங்களை மூட உத்தரவிடப்படுகிறது. வீடுகளுக்கு சென்று உணவுகளை வழங்கும் 'ஹோம் டெலிவரி' முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பஸ் டிப்போக்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும்.
அசாமின் மோரிகாவன் நகரில் வசித்து வந்த 24 வயது வாலிபர் கேரளாவில் இருந்தபொழுது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவரை கேரளாவில் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கேரள மருத்துவமனையில் இருந்து தப்பிய அந்த நபரை, போங்காய்காவன் ரெயில் நிலையத்தில் நின்ற ரெயிலின் பொது பெட்டியில் வைத்து அவரை கைது செய்தனர். பின்பு உடனடியாக ரெயிலில் இருந்து கீழே இறக்கி பரிசோதனை செய்தனர்.
அவரை போங்காய்காவன் பகுதியில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதேபோன்று எக்ஸ்பிரஸ் ரெயிலில் அந்த வாலிபருடன் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், வீட்டில் தனியாக கண்காணிப்பில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மத்திய நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
கொரோனா பரவலைத் தடுக்க தனித்திருத்தல் அவசியம். தனியார் துறையினர் இயன்றவரை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுரை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் 22-ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்படுகிறது. தேவையற்ற ரெயில் பயணங்களைத் தவிர்க்கும் வகையில் ரெயில்களில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்படுகிறது.
ரெயில், விமானங்களில் மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே கட்டணச் சலுகை நீடிக்கும். அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 53 வகையான கட்டணச் சலுகைகளில் வெறும் 15 மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. என்-95 முகக்கவசம் நாட்டில் போதுமான அளவில் கிடைக்கின்றன.
இந்தியாவில் வருகிற மார்ச் 22 முதல் வெளிநாட்டு விமானங்கள் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22 முதல் 29ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவசர / அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களைத் தவிர தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலையைச் செய்ய வகை செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கோரி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights