Advertisment

ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போட காங்கிரஸ் விரும்புகிறது – மோடி தாக்கு

காங்கிரஸ் முழு இடஒதுக்கீட்டையும் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகிறது; விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கிறது; தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

author-image
WebDesk
New Update
modi election dhar

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். (புகைப்படம்: நரேந்திர மோடி/ எக்ஸ் தளம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Anand Mohan J 

Advertisment

ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புவதாகக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவது அல்லது ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவது போன்ற திட்டங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை தடுக்க, தனக்கு 400 இடங்கள் தேவை என்றும் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க: PM Modi says 400 seats needed to stop Congress from ‘putting Babri lock on Ram Mandir’

400 இடங்கள் தேவை என்று பிரதமர் கூறி வருவதற்கான, காரணங்களில் இது அடுத்தக்கட்ட நகர்வு, ஏனெனில் தேர்தலுக்கு முன் அவர் எந்த காரணத்தையும் கூறவில்லை. முதல் கட்ட தேர்தலுக்குப் பிறகு, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி.க்களின் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் திருடுவதை தடுக்க, 400 எண்ணிக்கையை கடக்க வேண்டும் என்று மோடி கூறினார்.

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மற்றும் தார் மாவட்டங்களில் பேசிய மோடி, “400 இலக்கு” என்ற முழக்கம் அரசியலமைப்பை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளை எதிர்த்தார். “காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது... அவர்களுக்குத் தெரியாதா 2019 முதல் 2024 வரை... என்.டி.ஏ கூட்டணிக்கு ஏற்கனவே சுமார் 400 இடங்கள் ஆதரவு இருந்தது... ஆனால் இப்போது மோடிக்கு 400 இடங்கள் தேவை, இதனால் காங்கிரஸால் காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வந்து பிரச்சனையை உருவாக்க முடியாது. மோடிக்கு 400 இடங்கள் தேவை, அதனால் அயோத்தியில் ராமர் கோயில் மீது காங்கிரஸால் பாபர் பூட்டு போட முடியாது” என்று தார் பிரச்சாரத்தில் மோடி கூறினார்.

கர்கோனில், “இந்தியா வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் ‘வாக்கு ஜிஹாத்’ நடக்குமா அல்லது ‘ராம ராஜ்ஜியம்’ நடக்குமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று மோடி கூறினார்.

“பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் அச்சுறுத்துகிறார்கள், இங்கே காங்கிரஸ்காரர்களும் மோடிக்கு எதிராக ‘வாக்கு ஜிஹாத்’ செய்ய அறிவித்துள்ளனர், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஏமாற்றம் மற்றும் விரக்தியால் காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை யோசித்துப் பாருங்கள். ‘வாக்கு ஜிஹாத்’ உங்களுக்கு ஏற்புடையதா? ஜனநாயகத்தில் இதை அனுமதிக்க முடியுமா? இந்திய அரசியலமைப்பு இந்த வகையான ஜிஹாத்தை அனுமதிக்கிறதா? என்று மோடி கேள்வி எழுப்பினார்.

"காங்கிரஸ் கட்சியின் சதி" எவ்வளவு "ஆபத்தானது" என்பதைப் புரிந்து கொள்ள, அக்கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களைக் கேட்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். ராமர் கோயிலுக்குச் சென்றபோது, காங்கிரஸை விட்டு வெளியேறும் அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக ஒரு பெண் கூறினார். மற்றொரு நபர், முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் காங்கிரசை கைப்பற்றிவிட்டனர் என்றார். மூன்றாவது நபர் ஒரு ஆழமான சதியை வெளிப்படுத்தினார், ஷா பானோ வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவரது தந்தை ரத்து செய்தது போல், காங்கிரஸின் ஷாஜாதா (இளவரசர்) (ராகுல் காந்தியைப் பற்றிய குறிப்பு) ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய விரும்புகிறார். நான்காவது நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மக்கள் ஒரு பெரிய சதியில் ஈடுபட்டுள்ளனர் என்று வெளிப்படுத்தினார், அதாவது காங்கிரஸ் கட்சி மோடியை பொய்யான குற்றச்சாட்டுகளில் சிக்க வைக்க முடிவு செய்துள்ளது, வதந்திகளை பரப்பியது. அதனால்தான் இன்றைய நாட்களில் அரசியல் சாசனம் குறித்து பொய்கள் பரப்பப்படுகின்றன, அதனால்தான் நாடு அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது என்று பேசுகிறார்கள், என்று மோடி கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தேர்தல் ஸ்டண்ட் என்று விமர்சித்த முன்னாள் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தாக்கிய மோடி, “ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவிலும், பாகிஸ்தான் மீதான காங்கிரஸின் அன்பு உச்சத்தை எட்டுகிறது. இவர்களின் அறிக்கைகள் வியக்க வைக்கின்றன. நமது ராணுவம் தீவிரவாதத்திற்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறது, ஆனால் பாகிஸ்தான் அப்பாவி என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர் கூறுகிறார். இது நமது ராணுவத்திற்கு அவமானம் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவை தாக்கிய பிரதமர், “தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்த” தலைவர், “முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும், இடஒதுக்கீடு மட்டுமின்றி, முழு இடஒதுக்கீடும் முஸ்லீம்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்” என்று கூறினார்.

“இதன் அர்த்தம் புரிகிறதா? அதாவது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி சமூகங்கள் அனுபவிக்கும் அனைத்து இடஒதுக்கீட்டையும் பறித்துவிட்டு, முழு இடஒதுக்கீட்டையும் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகிறார்கள். ஆனால் ஏன் இப்படி செய்கிறார்கள்? ஏனென்றால், அவர்கள் பிழைத்துக்கொண்டிருக்கும் ஒரே வாக்கு வங்கி இதுவே, அவர்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள், எல்லோரும் ஒவ்வொருவராக அவர்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்,” என்று மோடி கூறினார்.

“விளையாட்டுகளிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸின் நோக்கம், அதாவது கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை இப்போது மதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் முடிவு செய்யும். நான் இன்று காங்கிரஸைக் கேட்கிறேன், இதைத்தான் அவர்கள் விரும்பினார்கள் என்றால், ஏன் 1947ல் பாரத அன்னையை மூன்று துண்டுகளாகப் பிரித்தார்கள்? 1947ல் ஒட்டுமொத்த நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி, இந்தியாவின் பெயரையும் இருப்பையும் அப்போதே அழித்திருக்க வேண்டும். இதை நான் இன்று உரத்த குரலில் கூறுகிறேன், அனைத்து காங்கிரஸ்காரர்களும் அவர்களின் கைக்கூலிகளும் கவனமாகக் கேட்க வேண்டும், இந்த மோடி உயிருடன் இருக்கும் வரை, தவறான மதச்சார்பின்மை அல்லது மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவின் அடையாளத்தை அழிக்கும் எந்த முயற்சியையும் அனுமதிக்க மாட்டேன்,” என்று மோடி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pm Modi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment