ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வழியாக பேசிய பிரதமர் மோடி, அரசாங்கத்தின் நலத்திட்ட நடவடிக்கைகளில் அனைத்து ஏழைகளும், தகுதியான பயனாளிகளும் விடுபடாமல் இருக்க கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 8 ஆண்டுகால ஆட்சியானது நாட்டின் சீரான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய மோடி, அரசாங்கத்தின் நலத்திட்ட நடவடிக்கைகளில் அனைத்து ஏழைகளும், தகுதியுள்ள பயனாளிகளும் விடுபடாமல் இருக்க கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
“இந்த மாதத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த 8 ஆண்டுகளில் தீர்மானங்கள், சாதனைகள் பல உள்ளன. இந்த 8 ஆண்டுகளில் அரசு சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
2014க்குப் பிறகு வந்த பாஜக அரசாங்கம், அரசாங்க அமைப்பு மற்றும் அதன் விநியோக செயல்பாடுகளின் மீது மக்கள் இழந்திருந்த நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
உலகமே இன்று இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, “அதேபோல், இந்தியாவில் பாஜக மீது மக்கள் தனி பாசம் வைத்துள்ளனர். நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
2014க்குப் பிறகு, பாஜக மக்களை விரக்தியிலிருந்து வெளியே கொண்டு வந்தது, இன்று மக்கள் லட்சியங்களால் நிறைந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
“நாட்டு மக்களின் இந்த நம்பிக்கையும் லட்சியங்களும் நம்முடைய பொறுப்பை அதிகரிக்கின்றன” என்று பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளிடம் கூறினார்.
சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நாடு நிர்ணயித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாஜக அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்து அவர்களுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக விஷத்தை புகுத்துவதற்காக சிறு சிறு பதற்றமான சம்பவங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை வெளிப்படையாகத் தாக்கிப் பேசினார்.
“நாட்டின் வளர்ச்சிப் பிரச்சினைகளில் இருந்து உங்களைத் திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும், ஆனால் நீங்கள் கவனம் சிதறக் கூடாது” என்று அவர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”