பெரோஸ்பூரில், போராட்டக்கரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டதால், பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம், காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மேம்பாலத்தில் சிக்கிக்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பஞ்சாப் மாநிலத்திற்கு வந்திருந்தபோது, பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்ததை தொடர்ந்து பிரதமர் மோடியின் கான்வாய் நிறுத்தப்பட்டது. இது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பெரிய குறைபாடு என்று கூறி உள்துறை அமைச்சகம் புதன்கிழமை பஞ்சாப் அரசாங்கத்திடம் இருந்து அறிக்கை கேட்டது. மேலும், இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கான பொறுப்பை சரிசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில அரசு விசாரணை நடத்தி வரும் நிலையில், எஸ்பிஜி விதிகளின் கீழ் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு மீறலுக்கு பொறுப்பான அதிகாரிகளை டெல்லிக்கு வரவழைக்க அல்லது அவர்களுக்கு எதிராக மத்திய அளவிலான விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“பஞ்சாபில் புதன்கிழமை நடந்தது எஸ்.பி.ஜி சட்டத்தை மீறுவதாகும். ஏனெனில், பிரதமரின் இயக்கத்திற்காக எஸ்.பி.ஜி நிர்ணயித்த அனைத்து நெறிமுறைகளையும் மாநில அரசு பின்பற்றத் தவறிவிட்டது. அதற்கான காரியங்கள் நடந்து வருகின்றன. நடவடிக்கை எடுக்கப்படும்” என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
எஸ்.பி.ஜி சட்டப் பிரிவு 14, பிரதமரின் செல்லும்போது எஸ்பிஜி-க்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு மாநில அரசாங்கத்தை பொறுப்பாக்குகிறது.
எஸ்.பி.ஜி குழுவிற்கு உதவி’ என்ற தலைப்பிலான விதிகள், “இது ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் துறை அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம், அனைத்து இந்திய தூதரகம், அனைத்து உள்ளூர் அல்லது பிற அதிகாரம் அல்லது அனைத்து சிவில் அல்லது ராணுவ அதிகாரிகளின் கடமையாகும். பாதுகாப்பு பணியாளர் அல்லது குழுவின் எந்தவொரு உறுப்பினருக்கும் உதவியாகச் செயல்படுவதற்கு அழைப்பு விடுக்கப்படும் போது, அத்தகைய இயக்குநர் அல்லது உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்று கூறுகிறது.
2020 டிசம்பரில், மேற்கு வங்கத்தில் அரசியல் பேரணியின் போது பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் கான்வாய் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தொண்டர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோது, உள்துறை அமைச்சகம் ஐஜி (தெற்கு வங்காள எல்லை) ராஜீவ் மிஸ்ரா, டிஐஜி (ஜனாதிபதி ரேஞ்ச்) பிரவீன் திரிபாதி ஆகியோருக்கு உத்தரவிட்டது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட எஸ்பி போலாநாத் பாண்டே அவர்கள் கான்வாய்க்கு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பில் இருந்ததால், மத்திய அரசின் பிரதிநிதியாக டெல்லிக்கு அறிக்கை அளிக்க வேண்டியிருந்தது.
இருப்பினும், மூன்று அதிகாரிகளையும், மத்தியப் பிரதிநிதித்துவத்திற்காக மாநில அரசு விடுவிக்கவில்லை.
உள்துறை அமைச்சகம், மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரிடம் அறிக்கையைக் கேட்டது. அவர்களை விளக்கம் கேட்கும் கூட்டத்திற்கு டெல்லிக்கு அழைத்தது. இருப்பினும், மாநில அரசு அறிக்கையை அனுப்பவில்லை. இரண்டு அதிகாரிகளும் இந்த விஷயத்தை மாநில அரசு ஏற்கனவே விசாரித்து வருவதாகக் கூறி மத்தியத்திடம் மன்னிப்பு கோரினர்.
இந்த விவகாரம், திரிணாமூல் காங்கிரஸ், மற்றும் பாஜக இடையே கண்டன அறிக்கை வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.