பாகிஸ்தான் மக்களுக்கும், இம்ரான் கானுக்கும் பிரதமர் மோடி அனுப்பிய மெசேஜ்.. இதுதான் விஷயமா?

நேற்றைய நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக வந்தபோது கைது செய்யப்பட்டார்.

Pakistan national day : இன்றைய சூழ்நிலையில் இரு துருவங்களாக பார்க்கபடும் இந்தியா – பாகிஸ்தான் பதற்த்தில், இந்திய நாட்டின் பிரதமர் மோடி, பாகிஸ்தான் மக்களுக்கும், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு முக்கிய மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

லாகூர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பாகிஸ்தான் தேசிய தினம் மார்ச 23 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் இருக்கும் அந்நாட்டின் தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களும் அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்த்து இந்தியா இந்த நிகழ்ச்சியை முற்றிலும் புறகணித்தது. இதுக் குறித்த தகவல்கள் ஒருபக்கம் சென்றுக் கொண்டிருக்க, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து மேசேஜ் வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மோடி அனுப்பியதாக கூறப்பட்டுள்ள மெசேஜில் என்ன செய்திக் குறிப்பு கூறப்பட்டது என்பதை அவர் தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

இதோ இம்ரான்கான் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவுகள், “ பிரதமர் மோடியிடன் இருந்து எனக்கு வந்த மேசேஜ், பாகிஸ்தானின் தேசிய தினத்தன்று நாட்டு மக்களுக்கு நான் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இருநாடுகள் நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், அமைதியை நிலைநாட்டவும், வளர்ச்சியை முன்னெடுக்கவும் இணைந்து செயல்படுவது அவசியம்.”என்று கூறியுள்ளார்.

இம்ரான கான் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டடில், “ பிரதமர் மோடி அனுப்பியுள்ள இந்த மேசேஜை நான் வரவேற்கிறேன். பாகிஸ்தான் தேதிய தினம் கொண்டாடப்படும் இந்நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, காஷ்மீர் விவகாரம். இந்த நேரத்தில் அமைதி அடிப்படையில் இருநாடுகளும் புதிய உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஒருபக்கம் தூதரகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியை இந்தியா புறக்கணித்துள்ளது, மறுபக்கம் பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருப்பதாக இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதுக் குறித்த விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதே நேரம், தூதரகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியை இந்தியா புறக்கணித்தது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார் அளித்திருக்கும் பேட்டியில், “தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்படிருக்கும் நிகழ்ச்சியில் ஹூரியத் தலைவர்கள் அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதனால் இந்நிகழ்ச்சிக்கு இந்தியா தரப்பில் யாரும் செல்லவில்லை. இந்த முடிவு அனைவரும் கூடி சேர்ந்து பேசி எடுக்கப்பட்டது.

ஹூரியத் தலைவர்களுடன் பாகிஸ்தானோ, பாகிஸ்தான் தூதரகமோ நட்பு பாராட்டினால் அதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. சிறிய விஷயமாக கருதாது’ என்று கூறியுள்ளார். அதே சமயம் பல பிரிவினைவாதத் தலைவர்கள்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையானோர் நேற்றைய நிகழ்ச்சியல் பங்கேற்கவில்லை என்ற தகவலும் கூறப்படுகிறது.

சென்ற மாதம் இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர் மனித உரிமை செயற்பாட்டாளர் முகமது அசான், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக வந்தபோது கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டுக்கு முன்னர், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சிக்கு இந்திய அரசு, ஒரு அமைச்சரை மரியாதை நிமித்தமாக அனுப்பி வைத்தது. அப்போதும் பிரிவினைவாதத் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close