பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "தனது யோகா உடற்பயற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து கொண்டார்.மேலும், இந்த 21 நாட்கள் எல்லைப் பூட்டுதலின் போது, மக்கள் யோகா பயற்சி செய்யுமாறு மக்களை வலியுறுத்தினார்.
நேற்று நடைபெற்ற 'மனதின் குரல்' என்ற வானொலி உரையின் போது," பிரதமரிடம் அவரது உடற்பயிற்சி குறித்து கேட்கப்பட்ட ஒரு நாள் கழித்து இது வருகிறது. யோகா வீடியோக்கள் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றன, மக்கள் அவற்றைப் பின்தொடரவும் எளிதாக பயிற்சி செய்யவும்.
பிரதமர் தனது ட்விட்டரில்,“நேற்றைய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், "இந்த எல்லைப் பூட்டுதலின் போது என்னுடையை உடற்பயிற்சி பற்றி ஒருவர் என்னிடம் கேட்டார். எனவே, இந்த யோகா வீடியோக்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். நீங்களும் தவறாமல் யோகா பயிற்சி செய்யத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன்,”என்று பதிவு செய்துள்ளார்.
யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “நான் உடற்பயிற்சி (அ) மருத்துவ நிபுணர் அல்ல. யோகா பயிற்சி பல ஆண்டுகளாக என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அது எனக்கு நன்மை பயக்குவதாக நான் நினைக்கின்றேன்" என்றார்.
மேலும், இந்த கடினமான நாட்களில், தாங்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி முறைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ட்விட்டர் பதிவில்." நீங்களும் பல வழிகளில் உடல் ஆரோக்கியத்தை பேணுவீர்கள் என்று நான் நம்புகிறேன், அதை நீங்களும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்"என்று கூறப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை தனது மாதாந்திர வானொலி உரையின் போது, முன்னறிவிப்பு இல்லாமல் 21 நாட்கள் நாடு தழுவிய எல்லைப் பூட்டுதளால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டார். மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிரதமர்,"கொரோனாவுக்கு எதிராக போரை நடத்துவதற்கு வேறு வழியில்லை" என்றும் தெரிவித்தார்.
"இந்த பூட்டுதல் உங்கள் சொந்த பாதுகாப்பிற்கானது,", "சட்டத்தை மீறுபவர்கள் உண்மையில் தங்கள் வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள்." என்று தெரிவித்த பிரதமர், களப்பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
யோகாவின் நன்மைகளை உலகம் முழுவதும் பரப்பியதில் மோடிக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொல்லலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.