பிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை 7 பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். எஸ் பேங்க்…

By: Published: March 8, 2020, 12:17:03 PM

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை 7 பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

இதில், முதல் நபராக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்தார்.


ஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்தவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்துகொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கின் வழியே எடுத்துக்கூறினார்.

மேலும், பலரின் கிண்டலான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

சினேகாவை தொடர்ந்து பல பெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகள் வழியே தங்களைப் பற்றி கூற உள்ளனர்.

பிரதமர் கௌரவத்தை நிராகரித்த 8 வயது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

இரண்டாவதாக, மாளவிகா ஐயர் என்பவர் பிரதமர் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்தார்.

இந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pm modi signs off social media on womens day 7 women achievers take over

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X