பிரதமர் நரேந்திர மோடி, 17வது மக்களவையின் கடைசி உரை இன்று (பிப்.5,2024) ஆற்றினார். அப்போது காங்கிரஸின் காந்தி குடும்பத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது. “எதிர்க்கட்சிகள் பல தசாப்தங்களாக எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளன. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும்; பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.
மேலும், “எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு காங்கிரஸ்தான் காரணம் என்ற பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 1000 ஆண்டுகள் நாட்டின் தொனியை அமைக்க 3வது முறையாக ஆட்சிக்கு வருவேன் ” என்றார்.
அப்போது, “தேசத்தின் மனநிலையை என்னால் கணிக்க முடிகிறது, அது நிச்சயமாக என்டிஏவுக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களையும், பாஜகவுக்கு குறைந்தபட்சம் 370 இடங்களையும் கொடுக்கும்” என்றார்.
மேலும், “மக்கள் உங்களை ஆசிர்வதித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து மோடி, “எதிர்க்கட்சியில் உள்ள பலர் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்துவிட்டனர், எனவே சிலர் தங்கள் இருக்கைகளை மாற்ற முயற்சிக்கின்றனர், மற்றவர்கள் ராஜ்யசபா வழியாக பாராளுமன்றத்திற்கு வர விரும்புகிறார்கள்” என்றார்.
இதையடுத்து, “வம்ச அரசியல், ஊழல் மற்றும் ஆட்சியில் தோல்வி ஆகியவை காங்கிரஸின் கடந்த காலத்தின் முக்கிய அடையாளங்களாக காணப்பட்டன.
நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தேவைப்பட்ட நேரம்; ஆனால் காங்கிரஸ் ஒரு நல்ல எதிர்க்கட்சியாக இருக்கத் தவறிவிட்டது, மற்ற கட்சிகளையும் ஒன்றாக ஆக்க விடவில்லை. கட்சி மற்ற பிரகாசமான தலைவர்களை வர விடவில்லை. காங்கிரஸ் தனக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும், நாட்டுக்கும் இவ்வளவு கேடுகளைச் செய்து விட்டது” என்றார்.
மோடி தலைமையிலான பிஜேபிக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சிக்கும் போது இந்த கூர்மையான தாக்குதல் வந்துள்ளது,
தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் வம்ச அரசியலுக்கும் பாஜகவில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோடி வேறுபாட்டைக் காட்டினார்.
அப்போது, “ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் சொந்த பலத்தாலும், பொதுமக்களின் ஆதரவுடனும், அரசியல் துறையில் முன்னேறினால், அதை வம்ச அரசியல் என்று நாங்கள் கூறவில்லை. ஒரு கட்சி ஒரு குடும்பத்தால் நடத்தப்படும்போது, கட்சி ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது, குடும்ப உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அதை நாங்கள் வம்ச அரசியல் என்று அழைக்கிறோம்” என்றார்.
எதிர்க்கட்சிகள் அடிக்கடி ஷாவின் மகன் ஜெய் ஷா கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ தலைவராகவும், சிங்கின் மகன் பங்கஜ் சிங் உத்தரபிரதேசத்தில் எம்எல்ஏவாகவும் இருப்பதை மேற்கோள் காட்டுகின்றன.
அமித் ஷாவுக்கோ, ராஜ்நாத் சிங்குக்கோ அரசியல் கட்சி கிடையாது” என்றார். இதையடுத்து, “காங்கிரஸ் ரத்து கலாச்சாரத்தில் சிக்கியுள்ளது, அது நாட்டின் ஒவ்வொரு சாதனையையும் வெற்றியையும் ரத்து செய்ய முயல்கிறது... நாங்கள் மேக் இன் இந்தியா என்கிறோம், ரத்து செய்யுங்கள் என்று காங்கிரஸ் சொல்கிறது.
ஆத்மநிர்பர் பாரத் என்கிறோம், ரத்து செய் என்கிறது காங்கிரஸ்; உள்ளூருக்கான குரல் என்று சொல்கிறோம், காங்கிரஸ் ரத்து என்கிறது; வந்தே பாரத் ரயில் என்கிறோம், ரத்து என்கிறது காங்கிரஸ்; புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை நாங்கள் சொல்கிறோம், ரத்து செய்கிறது என்று காங்கிரஸ் சொல்கிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இவை மோடியின் சாதனைகள் அல்ல, இவை நாட்டின் சாதனைகள்.
2014ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் இடைக்கால பட்ஜெட் உரையை மேற்கோள் காட்டி, அதில் நாட்டின் ஜிடிபி 30 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாக மாறும் என்று கூறியிருந்தார்.
இந்த தரவரிசை தவிர்க்க முடியாதது. அவர்கள் கனவு காணும் திறனைக் கூட இழந்துவிட்டார்கள், தீர்க்கும் திறன் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு 30 ஆண்டுகள் ஆகும் என்றார்கள். இப்போது நாடு மூன்றாவது இடத்தை அடையும் என்று சொல்கிறேன். நான் நாட்டை ஐந்தாவது நிலைக்கு கொண்டு சென்றுள்ளேன்.. அதை நினைத்து நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.. ஆனால் என்ன நோய் உங்களை வாட்டி வதைத்தது?
ஏழைகளுக்கு வீடு கட்டுவது முதல் சுகாதாரம் வரை மின்மயமாக்கல் வரையிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை 10 ஆண்டுகளில் பாஜக செய்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் என்ன செய்தது? மேலும், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகிய இருவருமே இந்தியர்களின் திறன் குறித்து மிகவும் மோசமான கருத்தைக் கொண்டிருந்தனர்.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து நேரு பேசியதை படிக்கிறேன். “இந்தியர்கள் கடினமாக உழைக்கப் பழகவில்லை. ஐரோப்பா அல்லது ஜப்பான் அல்லது சீனா அல்லது ரஷ்யாவில் உள்ளவர்கள் செய்வது போல் நாங்கள் கடினமாக உழைக்கவில்லை. இந்த சமூகங்கள் தங்கள் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் வளம் பெற்றுள்ளன” என்றார்.
பின்னர் பிரதமர் இந்திரா கூறியதை மேற்கோள் காட்டினார். அப்போது, “துரதிர்ஷ்டவசமாக, ஒரு நல்ல பணியை முடிக்கும்போது, நாம் மனநிறைவை அடைகிறோம், ஒரு சிரமம் ஏற்படும் போது, நாம் நம்பிக்கையை இழக்கிறோம். சில சமயங்களில், முழு நாடும் தோற்கடிக்கும் மனோபாவத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
அன்று இந்திரா காந்தி நாட்டு மக்களை சரியாக மதிப்பிடவில்லை; ஆனால் இன்று நாட்டு மக்கள் காங்கிரஸை சரியாக மதிப்பிட்டுள்ளனர்.
மத்திய அரசு தனது விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சுதந்திரமான மற்றும் தன்னாட்சி பெற்ற ஏஜென்சிகள் ஊழலுக்கு எதிராக செயல்படுவதாக மோடி கூறினார்.
அப்போது, “யார் என்னைக் குறை கூற விரும்புகிறாரோ, அதைத் தொடருங்கள். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுப்பேன். இந்த நாட்டை யாரையும் கொள்ளையடிக்க விடமாட்டேன்; கொள்ளையடித்தவர்கள் திருப்பித் தர வேண்டும் என்றும் இந்திய மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார்.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை வெளிப்படையாக விமர்சித்த நரேந்திர மோடி, அன்று கூட்டணி என்றார்கள் இன்று தனியாக நடக்கின்றார்கள்” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : PM Modi slams Cong ‘cancel’ culture, failure as Opp, predicts BJP sweep
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.