காங்கிரஸ் இல்லாத இந்தியா: பொதுக்கூட்டத்தில் மோடியின் பேச்சு!

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்றும் பிரதமர் மோடி சூளுரை நிகழ்த்தினார்.

பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். கர்நாடக மாநில பிஜேபி தலைவர் எடியூரப்பா அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் நிறைவு நாள் விழாவான இதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது பேசிய அவர், “ கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சி அமையும் நாள் அம்மாநிலத்திற்கு வளர்ச்சி பாதை ஆரம்பிக்கும் நாள். கர்நாடகாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் விரைவில் வெளியேரும் நாள் நெருங்கி விட்டது. பிஜேபி அரசு குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சார்ந்த மக்களின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிலர் சொந்த நலனிற்காகவே ஆட்சியில் இருக்கின்றனர். ஆனால், பிஜேபி அரசு சொந்த நலனை விட, நாட்டு மக்களின் நலனுக்காவே பாடுபட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய மோடி, “இந்தியா நாட்டிற்கு காங்கிரஸ் கலாச்சாரம் தேவையில்லை. மொத்தமாகவே காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். நமது நாட்டின் அரசியல், சமூகம், கலாச்சாரம் இவை எல்லாவற்றையும் காங்கிரஸ் கட்சி பாழாக்கி விட்டது. குறிப்பாக ஊழல் செய்வதில் காங்கிரஸ் கட்சி புதிய சாதனையை செய்து வருகிறது. ஜன்தன் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கு அதிகப்படியான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதுப்போன்று , நாட்டு மக்களின் தரத்தை உயர்த்த பிஜேபியிடம் அதிகப்படியான திட்டங்கள் இருக்கின்றனர்.” என்று மோடி உரையாற்றினார்.

2018 – 19 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மோடி கலந்துக் கொள்ளும் முதல் பொது கூட்டம் என்பதால், பட்ஜெட் குறித்து மோடி பேசுவார் என்று பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது.

×Close
×Close