பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார், அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான "சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை" வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi speaks to Russia’s Putin, stresses on dialogue in resolving Ukraine conflict
சமீபத்தில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய தலைவர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
“அதிபர் புதினுடன் பேசி, ரஷ்ய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன். வரும் ஆண்டுகளில் இந்தியா - ரஷ்யா சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று பிரதமர் மோடி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு விவகாரங்களில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர், மேலும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து விவாதிக்கும் போது, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு ஆதரவாக இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“