பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போது "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இரண்டாவது முறையாக" டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப் பதவியேற்ற பிறகு மோடியுடன் பேசிய முதல் உரையாடல் இதுவாகும்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Committed to mutually beneficial and trusted partnership’: PM Modi speaks to US President Trump
சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், மோடி, “எனது அன்பு நண்பர் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது முறை வெற்றிக்கு அவருக்கு வாழ்த்துகள். பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும்” இரு தலைவர்களும் இணைந்து செயல்படுவோம் என்றும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.