Advertisment

கனடா கோயில் மீது தாக்குதல்: 'கோழைத்தனம்' - மோடி கடும் கண்டனம்

கனடாவில் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தூதர்களை அச்சுறுத்துவதற்கு கோழைத்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi statement on attack

கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின், ப்ராம்ப்டன் பகுதியில் அமைந்துள்ள சபா மந்திர் இந்து கோயிலுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது, காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்து கோயில் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துவதற்காக கோழைத்தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதியை உறுதி செய்து நிலைநாட்ட வேண்டுமென கனடா நாட்டு அரசையும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்தியாவின் பங்களிப்பு இருந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதனால், கனடா மற்றும் இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், முதன்முறையாக பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Pro-Khalistan men target temple; PM Modi to Canada: Cowardly, uphold the law

 

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறிவைக்கப்படுவதன் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக கனடாவின் மூத்த அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில், தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அமித்ஷா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் ஆதாரமற்றவை என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த காலங்களிலும் இந்தியர்கள் மற்றும் இந்திய அதிகாரிகள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும், தற்போது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி முதன்முறையாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக, கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் ஷேக் ஹனிசா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த போது, அங்கு இந்தியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடமும் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழனையின் போது தூதரக முகாமுக்கு அருகே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பணிக்காக இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்திய தூதரக உயரதிகாரிகள் மற்றும் இந்து சபா மந்திர் கோயில் நிர்வாகம் இணைந்து நடத்திய முகாமில் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள், தாக்குதலின் போது காலிஸ்தான் கொடியை ஏந்தி இருந்ததை சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களில் காண முடிந்தது.

இந்திய தூதரக அதிகாரிகளின் வருகையை எதிர்த்து காலிஸ்தான் ஆதரவு பிரிவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக டொரண்டோ ஸ்டார் ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

“கனடாவில் இந்து கோயில் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதேபோல், இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் கோழைத்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எனது கண்டனங்கள். இந்த விவகாரத்தில் கனடா அரசு நீதியை நிலைநாட்டும் என நான் நம்புகிறேன்“ என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

மேலும், கனடாவின் அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

“கனடாவின் இந்து சபா மந்திரில் தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள உரிமை உள்ளது. தக்க நேரத்தில் நடவடிக்கை எடுத்து அப்பகுதி போலீசாருக்கு நன்றி. மேலும் இது குறித்து விசாரிக்கப்படும்“ என கனடா பிரதமரும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Modi Justin Trudeau
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment