பிரதமர் நரேந்திர மோடி, இந்த வாரத் தொடக்கத்தில் ஸ்வராஜ் பிரவாசி பாரதிய பவனில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அவர் அமைச்சர்கள் கூட்டத்திற்கு வருகையில் ஒரே காரில் குழுவாக வரும் திட்டத்தை பரிந்துரைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் எரிபொருள் மிச்சமாகுவது மட்டுமின்றி தங்கள் அமைச்சகங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவரின் பரிந்துரைபடி, ஒரு காரில் மத்திய அமைச்சர் மற்றும் இரண்டு இணையமைச்சர்கள் வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் குரூப்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதன்கிழமை விக்யான் பவனில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் தேசிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தின் ஆரம்பத்தில், வாட்ஸ்அப்பில் மாநில சுகாதார அமைச்சர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் குழுவைத் தொடங்குவதற்கான முன்மொழிவு வெளியிடப்பட்டது. இது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடன் உடனடியாக பேச உதவியாக இருக்கும் என கூறினர்.
குழு நிறைவடையும் போது மாநில அமைச்சர்கள் மன்சுக்கிடம் வாட்ஸ்அப் குழு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். வாட்ஸ்அப் குழு மூலம், மாநில பிரச்சினைகள் குறித்து உங்களுடன் விவாதிக்க உதவியாக இருக்கும் என அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜகவும், ஒய்எஸ்ஆர்சிபியும்
பாஜகவும் ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியும் வித்தியாசமான உறவை கொண்டுள்ளனர்.ஆந்திரா பொறுப்பாளராக உள்ள பாஜக செயலாளர் சுனில் தியோதர், YSRCP அரசாங்கத்தையும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிவைத்து பல கருத்துகளை தெரிவித்தார்.
ஆனால், அதே நாளில், YSRCP கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பி வி விஜயசாய் ரெட்டி, மத்திய அரசின் பல முயற்சிகளை பாராட்டினார்.ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு வலுவான எச்சரிக்கை அளித்தத்தற்காக உள் துறை அமைச்சர் அமித் ஷாவை ட்விட்டரில் அவர் பாராட்டினார். மேலும், ரயில்வே, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பிற அமைச்சகங்கள் எடுத்துள்ள முயற்சிகளையும் பாராட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil