மோடி பதவியேற்பு விழா : 6000 விருந்தினர்கள் பங்கேற்கும் கோலாகல விழா

நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக 30ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 6 ஆயிரம் விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்

By: May 29, 2019, 9:00:20 PM

நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக 30ம் தேதி இரவு 7 மணிக்கு இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்வு, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி பதவியேற்பு விழா : 30ம் தேதி, இரவு 7 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 6 ஆயிரம் விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருந்தினர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் HIgh Tea menu எனும் விருந்து உபசரிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த high tea menuவில் சாண்ட்விச்கள், சமோசாக்கள் என ராஜ உபச்சாரமாக இந்த விருந்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், சைவ உணவு சாப்பிடுபவர்கள், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என விருந்தினர்களின் ரசனைகளுக்கு ஏற்ப தனித்தனியாக உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இதற்காக, ஜனாதிபதி மாளிகையின் சமையலறை, நிகழ்ச்சி துவங்குவதற்கு 8 மணிநேரத்திற்கு முன்னரே, சமையல் வேலைகளை துவங்க உள்ளன.

BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பின் தலைவர்கள், மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இந்த நாடுகளின் உணவுகள், இந்திய உணவுகள் அளவிற்கு இருக்காது மற்றும் அவர்களின் உணவு நேரம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு உணவு வகைகள் சமைக்கப்பட உள்ளன.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு உணவு சமைத்த சமையல் கலைஞர் மசிந்திரா கஸ்துரே மற்றும் அவரது குழுவினர், மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு உணவு வகைகளை படைக்க உள்ளனர்.

கலந்துகொள்ளும் உலக நாடுகளின் தலைவர்கள்
வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பின் தலைவர்கள், மொரிசியஸ், கிர்கிஜ் குடியரசு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர பிரதேசத்தின் புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான சிரோன்மணி அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதீஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸகவான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்திற்கு, மோடி பதவியேற்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்பு விழாவில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொண்ட நிலையில், தற்போதைய விழாவில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm modi swearing in 6000 guests participate in rashtrapathi bhavan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X