ஜாமின் கேட்கும் ப சிதம்பரம்: பிரதமர் மோடி மறைமுக தாக்கு

இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்

modi chidambaram, pm modi jharkhand, pm in ranchi, prime minister in jharkhand, jharkhand projects launch, indian express news, p chidambaram
modi chidambaram, pm modi jharkhand, pm in ranchi, prime minister in jharkhand, jharkhand projects launch, indian express news, p chidambaram, ப.சிதம்பரம், பிரதமர் மோடி, தேசிய செய்திகள்

“ஊழலைக் கட்டுப்படுத்தவும், முஸ்லீம் சகோதரிகளின் உரிமைகளுக்காகப் போராடவும், பயங்கரவாதத்தை வேரறுக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம். ஊழல் நிறைந்த சிலர் ஏற்கனவே தங்கள் இடத்தில் (சிறையில்) வைக்கப்பட்டுள்ளனர். தாங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைத்தவர்கள் இப்போது ஜாமீனுக்காக நீதிமன்றங்களை அணுகி வருகின்றனர்” என்று ராஞ்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சிதம்பரம், தற்போது செப்டம்பர் 19 வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட எஃப்ஐபிபி அனுமதியில் முறைகேடுகள் நடந்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.


புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களான ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் குறித்து பிரதமர் மோடி, “ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் வளர்ச்சியைக் கொண்டுவருவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், இதற்கான பணிகள் என்டிஏ 2.0-ன் முதல் 100 நாட்களில் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

மோடி தனது பயணத்தின் போது, ஜார்க்கண்டின் தலைநகரில் பல திட்டங்களைத் தொடங்கினார், மேலும் ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் நன்மை பயக்கும் பெரிய திட்டங்களைத் தொடங்குவதே அரசின் நோக்கம் என்று கூறினார். மேலும், இங்கு திறக்கப்பட்ட புதிய மல்டி மாடல் சரக்கு முனையம் இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

“உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத திட்டமான ஆயுஷ்மான் பாரத் ஜார்க்கண்டில் தொடங்கப்பட்டது. இன்று, பிர்சா முண்டாவின் இந்த நிலத்திலிருந்து வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டங்களும் தொடங்கப்பட்டன. ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் நன்மை பயக்கும் பெரிய திட்டங்களைத் தொடங்குவது ஜார்க்கண்ட் ஆகும்” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

ராஞ்சியில் விவசாயிகளுக்காக ‘பிரதான் மந்திரி லாகு வியாபரிக் மந்தன் யோஜனா’ மற்றும் ‘ஸ்வரோஜ்கர்’ ஓய்வூதிய திட்டங்களையும் பிரதமர் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகளுக்கு 60 வயதை எட்டிய பின்னர் மாதத்திற்கு ரூ .3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தில் பயனடைவார்கள். 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள், இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modi takes dig at chidambaram says some corrupt people already put in place

Next Story
அசோக் பர்மர்- குதுபுத்தின் அன்சாரி: கலவர காயங்களை கடந்து உதித்த மனிதநேயம்Two faces of 2002 Gujarat riots, Qutubuddin Ansari inaugurates Ashok Parmar, Ahmedabad, Ekta Chappal Shop, குஜராத் கலவரம், குதுபுத்தின் அன்சாரி, அசோக் பர்மர், 2002 Gujarat riots, Qutubuddin Ansari inaugurates Chappal Shop
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com