உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். மேலும், அவர் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/PnMHxvsNiiNLQXBDdz0T.jpg)
இந்த ஆண்டுக்கான மகா கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நாள்தோறும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் இதில் புனித நீராடினர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/FYRe8uItX5XZWpTs408H.jpg)
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் இன்றைய தினம் கும்பமேளா நிகழ்வுகளில் பங்கேற்றார். முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/05/avhcJSQQYJtU17wSZSu2.jpg)
புனித நீராடிய பின்னர், பல்வேறு பூஜைகள் செய்து மோடி வழிபாடு நடத்தினார். அவருக்கு பால், சால்வை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
ஏற்கனவே, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியன்று கும்பமேளா ஏற்பாடுகளை மோடி பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.