Advertisment

‘சந்திரசேகர் ராவின் தவறான செயல்களால் அவரை என்.டி.ஏ-வில் சேர விடவில்லை - மோடி பேச்சு

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) என்.டி.ஏ-வில் சேர விரும்பியதாகவும் ஆனால், அவரை நிராகரித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

author-image
WebDesk
New Update
PM Modi

கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) என்.டி.ஏ-வில் சேர விரும்பியதாகவும் ஆனால், அவரை நிராகரித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) என்.டி.ஏ-வில் சேர விரும்பியதாகவும் ஆனால், அவரை நிராகரித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Advertisment

தெலுங்கானா சூப்பர் அனல் மின் நிலைய திட்டத்தின் முதல் கட்ட 800 மெகாவாட் அலகு மின் உற்பத்தி உட்பட பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

ஆங்கிலத்தில் படிக்க: PM Modi targets BRS in Telangana: ‘didn’t let K Chandrashekar Rao join NDA because of his misdeeds’

நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அங்கு அவர் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த எதிர்க்கட்சிகள் 'லோக்தந்திரத்தை' (ஜனநாயகத்தை) 'கொள்ளை-தந்திரம்' (கொள்ளை ஜனநாயகமாக) ஆக்கிவிட்டன. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) என்.டி.ஏ-வில் சேர விரும்புவதாக கூறினார்.  “அவருக்கு ஆதரவை வழங்குமாறு அவர் என்னிடம் கேட்டார். அவரது செயல்களால் மோடியை அவருடன் தொடர்புபடுத்த முடியாது என்று நான் அவரிடம் கூறினேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக, பஸ்தாரின் ஜக்தல்பூரில் பேசிய பிரதமர்  மோடி, அங்கு காங்கிரஸ் தலைவர்கள் “ஜித்னி அபாதி உத்னா ஹக்” என்று கூக்குரலிட்டாலும், இந்த முழக்கம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிலைப்பாட்டிற்கு மாறாக உள்ளது என்று கூறினார். நாட்டின் வளங்களுக்கு சிறுபான்மை சமூகம் முதன்மை உரிமை கோர வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை அவர்கள் (காங்கிரஸ்) குறைக்க நினைக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறதா? ஏழைகளின் நலனே தனக்கு இறுதி இலக்கு என்று பிரதமர் மோடி கூறினார்.

அதற்கு முன், பிரதமர் மோடி சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் ரூ.26,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் ரூ.23,800 கோடி மதிப்பிலான எஃகு ஆலை மற்றும் பல ரயில் மற்றும் சாலைத் திட்டங்களும் அடங்கும். ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு காங்கிரஸ் ஆளும் மாநிலத்துக்குப் பிரதமரின் நான்காவது பயணம் இதுவாகும். இதற்கிடையில், தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை, நகர்நார் எஃகு ஆலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பஸ்தாரில் செவ்வாய்க்கிழமை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

“தமிழகத்தில் உள்ள் கோயில்களை மாநில ஆக்கிரமித்துள்ளது. கோயில்களைக் கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துகள் வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துகிறது.  மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும். கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம். தமிழ்நாட்டில் உள்ள தனது கூட்டணி கட்சியிடம் காங்கிரஸ் பேசி கோயில்களை விடுவிக்குமா” என்று தெலுங்கானாவில் பேசிய பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment