காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க 'ஷேஜாதா' (இளவரசர்) காத்திருப்பதாகவும், அமேதி தொகுதியை விட்டு ஓடி போனது போல் கேரளாவின் வயநாட்டை விட்டு ஓடி விடுவார் என்றும் சனிக்கிழமை கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi targets Rahul Gandhi: ‘Congress shehzada will flee from Wayanad like he did in Amethi’
“காங்கிரஸின் ஷேஜாதா வயநாட்டில் சிக்கலை எதிர்கொள்கிறார். ஷேஜாதாவும் அவரது கும்பலும் வயநாட்டில் வாக்குப் பதிவு முடியும் வரை காத்திருக்கின்றனர், அதன் பிறகு அவருக்கு பாதுகாப்பான இடத்தை அறிவிப்பார்கள். நான் கூட பயன்படுத்தாத மொழியில் கேரள முதல்வர் அவரை கடுமையாக சாடியுள்ளார். அமேதியில் இருந்து ஓடிப்போனது போல், வயநாட்டில் இருந்தும் ராகுல் ஓடி போவார்” என்று பிரதமர் மோடி கூறினார்.
மகாராஷ்டிராவின் நந்தோடு மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பிரதாப்ராவ் பாட்டீல்-சிக்லிகர் மற்றும் ஹிங்கோலியில் ஷிண்டே சிவசேனாவின் பாபுராவ் கோலிகர் ஆகியோருக்கான தேர்தல் பேரணியில் உரையாற்றியபோது மோடி இவ்வாறு கூறினார்.
மஹாயுதியின் இரண்டு வேட்பாளர்களின் வெற்றி இறுதியில் தன்னை பலப்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார். “நீங்கள் ஒவ்வொருவரும் (கூட்டம்) எனக்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்களுக்கு என் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்,” என்று கூறிய மோடி, ஆளும் தரப்பு தனது முகத்தையும், புகழையும் மட்டுமே வைத்து தேர்தலில் போட்டியிடுகிறது என்று கூறினார்.
“தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் இன்னும் தங்கள் தலைவரை இறுதி செய்ய முடியாததால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் அவர்களின் தலைவரைக் கேட்கிறார்கள், ஆனால் அவர்களால் பதிலளிக்க முடியாது. தேர்தலுக்கு முன்பே, காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது,'' என்று மோடி கூறினார்.
”தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் (எதிர்க்கட்சியில் இருந்து) ராஜ்யசபா வழியை தேர்வு செய்திருப்பது மூலம் அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது தெளிவாகிறது. இந்தியா கூட்டணிக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை, பிரச்சாரம் செய்யவில்லை. 25 சதவீத இடங்களில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக சண்டையிட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை எழுப்பி, ஒருவரையொருவர் சிறையில் தள்ளப்போவதாக மிரட்டி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களை நம்ப முடியுமா” என்று மோடி கேட்டார்.
காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி, “சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் வேட்பாளருக்கு இந்த காங்கிரஸ் குடும்பங்கள் வாக்களிக்காது. இப்படி ஒரு நிலை எப்போதாவது வரும் என்று நினைத்தீர்களா?” விவேகமுள்ள எந்த குடிமகனும் இந்த கூட்டணிக்கு தங்கள் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள் என்று மோடி கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய மோடி, “காங்கிரஸின் ஒவ்வொரு காயத்தையும் குணப்படுத்துவது மோடியின் கியாரண்டி. சட்டப்பிரிவு 370, முத்தலாக், வளரும் பொருளாதாரம். அயோத்தியில் ராம் லல்லாவுக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்டப்படுகிறது, ஆனால் இந்தியா கூட்டணி சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்கிறது, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்ததை ஊர்ஜிதம் செய்கிறது, ராமர் கோவிலில் பூஜையை பகந்த் (பாசாங்குத்தனம்) எனக் குறிப்பிட்டது மற்றும் நமது ஆஸ்தாவை (நம்பிக்கையை) அவமதிக்கிறது. இவர்களை மன்னிக்க முடியாது,” என்று கூறினார்.
”பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் அரசு CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) கொண்டு வந்துள்ளது. அது இல்லாமல் இருந்திருந்தால், நமது சீக்கிய சகோதர சகோதரிகள் கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்? காங்கிரஸ் அதை எதிர்க்கிறது, காங்கிரஸ் 1984 க்கு பழிவாங்க முயல்கிறது என்று தெரிகிறது,” என்று கணிசமான சீக்கிய மக்கள் இருக்கும் நந்தேட்டில் மோடி உரையாற்றினார்.
“இந்த 10 வருடங்கள் ஒரு டிரெய்லர். இந்தக் காலக்கட்டத்தில் எங்களின் பெரும்பான்மையான நேரம் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில்தான் இருந்தது. மராத்வாடா மற்றும் மகாராஷ்டிராவுக்கு நாம் இன்னும் கடமைப்பட்டு இருக்கிறோம்,” என்று மோடி கூறினார்.
முதல் கட்டமாக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, எந்த விலை கொடுத்தாலும் வாக்களிக்குமாறு மக்களிடம் கூற விரும்புவதாக கூறினார். “யாருக்கும் வாக்களியுங்கள், ஆனால் வாக்களியுங்கள். வெப்பம், விவசாய வேலைகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற பிரச்சனைகள் உள்ளன என்பதை நான் அறிவேன், ஆனால் எந்த காலநிலையிலும் எல்லையை பாதுகாக்கும் வீரர்களை பாருங்கள், நாட்டின் எதிர்காலத்தை அவர்கள் பாதுகாப்பார்கள் என்ற உணர்வு வாக்காளர்களின் மனதில் இருக்க வேண்டும்,” என்று மோடி கூறினார்.
“இன்று இல்லையென்றால் நாளை அல்லது நாளை மறுநாள் உங்களுக்கு (எதிர்க்கட்சிக்கும்) வாய்ப்பு கிடைக்கும்... அதனால்தான் தோல்வி உறுதியான கட்சிகளின் தொண்டர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்... வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் மகத்துவத்தை நிரூபிக்கும், அதற்காக வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும்’’ என்றும் மோடி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.