/indian-express-tamil/media/media_files/2025/10/22/modi-thanks-us-president-trump-2025-10-22-11-32-19.jpg)
'2 ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்'... டிரம்ப்பின் தீபாவளி வாழ்த்துக்கு மோடி நன்றி
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதன்கிழமை அன்று தொலைபேசி வாயிலாக பேசியபோது, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததற்காக அவருக்கு நன்றி கூறினார். இந்த உரையாடலின்போது, இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையின் நீடித்த வலிமையை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதி செய்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில், "ஒளிரும் இந்த தீபாவளி திருவிழாவில், நமது 2 சிறந்த ஜனநாயகங்களும் தொடர்ந்து நம்பிக்கை ஒளியைப் பரப்பவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கவும் வேண்டும்," என்று பதிவிட்டார்.
Thank you, President Trump, for your phone call and warm Diwali greetings. On this festival of lights, may our two great democracies continue to illuminate the world with hope and stand united against terrorism in all its forms.@realDonaldTrump@POTUS
— Narendra Modi (@narendramodi) October 22, 2025
இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரசு அமீரகம், ஆஸ்திரேலியா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினரும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 5 திரி பித்தளை விளக்கை ஏற்றி, தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய டிரம்ப், “இந்திய மக்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றுதான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். ஒரு சிறந்த உரையாடல் நடந்தது. வர்த்தகம் பற்றி பேசினோம். அவர் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளார். பாகிஸ்தானுடன் எந்தப் போர்களும் வேண்டாம் என்று நாங்கள் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினோம். வர்த்தகம் குறித்து மோடியுடன் பேசியது உண்மைதான். பாகிஸ்தானுடனும் இந்தியாவுடனும் எங்களுக்கு எந்தப் போரும் இல்லை. மோடி ஒரு சிறந்த மனிதர், அவர் பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சிறந்த நண்பராகிவிட்டார். இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி என்பதைக் குறிக்கிறது” என்றார்.
ரஷ்யா தனது எண்ணெய் வருவாயை போர் இயந்திரங்களுக்குப் பயன்படுத்துவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் முடிவு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமைதியைக் கொண்டுவர உதவும் என்று அவர் கூறினார். "நாங்க நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசினோம், ஆனால் பெரும்பாலும் உலக வர்த்தகம் பற்றியே பேசினோம்," என்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்தார்.
உக்ரைனில் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், டெல்லியின் கச்சா எண்ணெய் கொள்முதலை தடுக்க, அமெரிக்க அதிபர் சமீபத்தில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதலைக் குறிவைத்து, இந்திய ஏற்றுமதிகளுக்கு கூடுதலாக 25% வரி விதித்தார். இதனால் இந்தியப் பொருட்களுக்கான ஒட்டுமொத்த வரி 50% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us