scorecardresearch

இந்த கப்பலில் நீங்களும் போகணுமா? பிரதமர் துவக்கி வைக்கும் உலகின் மிக நீளமான கப்பல் பயணம் இதோ

கங்காவிலாஸ் என்று பெயரிடப்பட்ட கப்பல் பயணத்தை பிரதமர் மோடி ஜனவரி 13-ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

இந்த கப்பலில் நீங்களும் போகணுமா? பிரதமர் துவக்கி வைக்கும் உலகின் மிக நீளமான கப்பல் பயணம் இதோ

கங்காவிலாஸ்  என்று பெயரிடப்பட்ட  கப்பல்  பயணத்தை  பிரதமர் மோடி ஜனவரி 13-ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

வாரணாசி  முதல் திப்ருகார் வரை செல்லக்கூடிய  கப்பல் பயணத்தை பிரதமர் மோடி வருகின்ற 13-ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். உலகின் மீக நீண்ட  கப்பல் பயணம் இதுவாகும். கங்காவிலாஸ் கப்பலானது இந்தியா மற்றும் பங்களாதேஷ்-யில் உள்ள 29  நதிகளில் பயணிக்கிறது.

மேலும் இந்த கப்பல் பிஹார், பாட்னா, கொல்கத்தா, டாக்கா, குவஹாத்தி வழியாக  திப்ருகார் சென்றடையும். மேலும் இந்த கப்பலில் 18 அறைகள் உள்ளது. இதில் 36 சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ. 25,000  வசூலிக்கப்படுகிறது.

மேலும் இந்த கப்பல் பயணத்தில் வாரணாசியில் உள்ள பிரபலமான கங்கை ஆர்தி, புத்த தளமான சாரநத் மற்றும் அசாமின் தீவுகளை நாம் பார்த்து ரசிக்க முடியும். இதுபோல சுந்தரவனக்காடுகள் மற்றும் காசிரங்கா தேசியப் பூங்காவையும் நாம் காணலாம்.

மேலும் இது இந்தியாவின் சுற்றுலாத்துறையை பலப்படுத்தும் என்றும் இதனால் அதிக மக்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவார்கள் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm modi to flag off luxury ganga cruise