நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் : நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

வரும் 10 ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்

வரும் 10 ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். 2022 அக்டோபரில் பணிகள் முடிவடையும். 75-வது சுதந்திர தின விழா புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த, பிரமாண்டமான தொடக்க விழாவில் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நேற்று, செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, “பழைய கட்டிடத்தில் இருந்து சுதந்திர இந்தியாவின் பயணம் தொடங்கியது. 75-வது சுதந்திர தின விழாவை நிறைவு செய்யும்போது, ​​புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் அமர்வையும் நாங்கள் பெறுவோம்… இந்த நாடாளுமன்றம், வெறும் செங்கல் மற்றும் காரைகளால் கட்டப்பட்ட கட்டிடம் இல்லை. இது,130 கோடி மக்கள் கனவுகளின் ஒரு முழுமை  ” என்று தெரிவித்தார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் பற்றி இதுவரை  தெரிந்தவை:

# புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் பணி டாடா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபரில், டாக்டர் பிமல் படேல் தலைமையிலான குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட எச்.சி.பி டிசைன், பிளானிங் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் இத்திட்டத்தை வடிவமைத்தது.

# பூமி பூஜை : வரும் 10 ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.

# நிறைவு ஆண்டு: 2022 அக்டோபரில் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

# 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் வர உள்ளது.

# மொத்த செலவு 971 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

# கட்டிடத்தில் 6 நுழைவாயில்கள் இருக்கும்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான சிறப்பு நுழைவு;  மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரத்தியோக நுழைவு வாயில்; பிரத்தியோக சிறப்பு நுழைவு; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றொரு நுழைவு; இரண்டு பொது நுழைவாயில்கள்.

# புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நான்கு தளங்கள் இருக்கும்

# நாடாளுமன்றக் குழு, நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் அலுவலகங்கள், மக்களவை செயலகம், மாநிலங்களவை செயலகம், பிரதமர் அலுவலம்,  ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுக்கான அலுவலகம் உட்பட மொத்தம் 120 அலுவலக இடங்கள் இடம்பெறும்.

3,015 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய மக்களவை கட்டிடத்தில்,888 உறுப்பினர்கள் அமர ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போதைய மக்களவை 1,145 சதுர மீட்டர் பரப்பளவில், வெறும் 543 உறுப்பினர்கள் அமர வழி வகுக்கிறது.

3,220 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய  மாநிலங்களவை கட்டிடத்தில் 384 உறுப்பினர்கள் அமர ஏற்பாடு செய்யப்படுகிறது. தற்போதைய மாநிலங்களவை 1,232  சதுர மீட்டர் பரப்பளவில், வெறும் 245 உறுப்பினர்கள்  அமர வழி வகுக்கிறது.

இரு அவைகளின் கூட்டு அமர்வின்  போது, ​புதிய மக்களவை கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 1,224 உறுப்பினர்களை தங்க வைக்கும்.

# பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேர் அமரக்கூடிய பெஞ்சுகளில் அமர்த்தப்படுவார்கள்.

# இருக்கைகள் 60 செ.மீ அகலமும் 40 செ.மீ உயரமும் இருக்கும். .

# அருகிலுள்ள கட்டிடம், ஷ்ரம் சக்தி பவனின் தளத்தில் வரும், அனைத்து எம்.பி.க்களுக்கும் அறைகள் இருக்கும், மேலும் அது ஒரு அண்டர்பாஸ் வழியாக இணைக்கப்படும்.

#நில நடுக்கத்தை தாங்கும் வலிமையுடனும், நெருப்பை எதிர்த்து போராடும் வசதிகளுடன் இந்த கட்டிடம் உருவாக்கப்படுகிறது. மேலும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

# ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களுக்கான தளபாடங்கள், வாக்களிப்பதை எளிமையாக்கும் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதீநவீன வசதிகளை கொண்டிருக்கும்.

கட்டுமானப் பணிகளில் சுமார் 2,000 பேர் நேரடியாக ஈடுபடுவார்கள், மேலும் 9,000 பேர் மறைமுகமாக பங்கு கொள்வார்கள் .

# நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட இந்திய கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள்  பணியாற்ற உள்ளனர்.

புதிய நாடாளுமன்றம் குறித்து, மூத்த அதிகாரி கூறுகையில், “இது அதிநவீன ஒலியியல் மற்றும் மூன்று கோபுரங்களைக் கொண்ட ஒரு முக்கோண நாடாளுமன்றமாக இருக்கும். இது ஜனநாயகத்தின் உணர்வை பிரதிபலிக்கும். இந்த புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சாளரமும் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். புதிய நாடாளுமன்றத்திற்குள் 75 வது ஆண்டு அமர்வு (2022) நடக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.” என்று கூறினார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modi to lay foundation stone of new parliament building

Next Story
நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ போராட்டம்: திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com