மே 31 வரை சென்னைக்கு ரயில்கள், விமான சேவையை இயக்க வேண்டாம்: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல” என்று சாடியுள்ளார்.

PM Modi video conference meeting with all state chief ministers, PM Modi video conference meeting with all cms, pm modi meeting with cms, பிரதமர் மோடி, பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம், முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை, மம்தா பானர்ஜி விமர்சனம், இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல, தமிழக முதல்வர் பழனிசாமி, cm edappadi k palaniswami, mamata banerjee narendra modi meeting, lockdown extension, modi chief ministers meeting, covid-19 india tracker, modi coronavirus meeting, india lockdown, lockdown 3.0, lockdown news, covid-19, tamil indian express
PM Modi video conference meeting with all state chief ministers, PM Modi video conference meeting with all cms, pm modi meeting with cms, பிரதமர் மோடி, பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம், முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை, மம்தா பானர்ஜி விமர்சனம், இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல, தமிழக முதல்வர் பழனிசாமி, cm edappadi k palaniswami, mamata banerjee narendra modi meeting, lockdown extension, modi chief ministers meeting, covid-19 india tracker, modi coronavirus meeting, india lockdown, lockdown 3.0, lockdown news, covid-19, tamil indian express

பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல” என்று சாடியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பிரதமர் மோடி 5-வது முறையாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போல, தமிழகத்தில், முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, பேசிய பிரதமர் மோடி, கோவிட் -19 இன் பரவலைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூக தொலைதூர விதிமுறைகள் உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மக்களால் எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், மெதுவாக ஆனால் நிச்சயமாக, நாட்டின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. வரவிருக்கும் நாட்களில், இந்த நடவடிக்கை செயல்பாடு அதி வேகத்தை அடையும். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் இப்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பொது முடக்கத்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், சிவப்பு மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் ஏற்கெனவே கோரிய ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

ரயில் சேவை, விமான சேவை பற்றி பிரதமரிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இப்போதைக்கு சென்னைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டாம். மே 31 ஆம் தேதி வரை சென்னைக்கு ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். மேலும், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

பிரதமருடன் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாம், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கும் ஆண்டுக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் கோடி கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் தானியங்களை இலவசமாக தர வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

பிரதமர் நடத்திய காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் செய்ததாக மத்திய அரசை கடுமையாக சாடினார். மேலும், பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதை எதிர்த்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால், மேற்கு வங்கத்தை ஏன் மத்திய அரசு தாக்குகிறது” என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

கூட்டாட்சி அமைப்பை சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் பிற சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் முன் மாநிலங்களுடன் பேசுமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் காணொலி ஆலோசனைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த முறை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டதைப் போல இல்லாமல், இந்த முறை அனைத்து முதல்வர்களுக்கும் தங்கள் கருத்தைப் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modi video conference meeting with all state chief ministers tamil nadu cm palaniswami west bengal cm mamata banerjee

Next Story
ஒரு அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com