கேரளா வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் ஏப்ரல் 25-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கேரளா வருகை தருகிற 2 நாள் பயணத்தின்போது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் எழுதிய குற்றவாளியை கேரள போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் கே. சேது ராமன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பிரதமருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சேவியர் நேற்று கைது செய்யப்பட்டார். காரணம் தனிப்பட்ட விரோதம். அண்டை வீட்டாரை சிக்க வைக்க கடிதம் எழுதியுள்ளார். தடயவியல் உதவியுடன் அவரை கண்டுபிடித்தோம்” என்று கூறினார்.
கொச்சியில் இருந்து ஒருவர் மலையாளத்தில் எழுதியதாகக் கூறப்படும் கடிதம், பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. சுரேந்திரனின் அலுவலகத்திற்கு வந்தது. இந்த கடிதம் கடந்த வாரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆரம்பத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நேர்ந்த கதியை எதிர்கொள்ள நேரிடும் மோடி என்று கூறிய கடிதத்தில் இருந்த என் கே.ஜானி என்ற நபரை போலீசார் கண்டுபிடித்தனர். கொச்சியைச் சேர்ந்த ஜானி, கடிதம் எழுதவில்லை என்று மறுத்ததோடு, தனக்கு எதிராக வெறுப்பில் உள்ள ஒருவரே இந்தப் படுகொலை மிரட்டல் கடிதத்துக்கு பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 25-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மேலும், ரூ. 3,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பிரதமர் மோடி கொச்சி வாட்டர் மெட்ரோ போக்குவரத்து சேவையை மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கொச்சியை சுற்றியுள்ள 10 தீவுகளை பேட்டரி மூலம் இயக்கப்படும் மின்சார ஹைபிரிட் படகுகள் மூலம் கொச்சி நகரத்துடன் தடையில்லா இணைப்பிற்காக இணைக்கும் இந்த திட்டம் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேது ராமன் ஏ.என்.ஐ- செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “… இதற்காக 2060 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்துக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“