ஜம்மு காஷ்மிரில் எல்லை வீரர்களுடன் தீபாவளி - நரேந்திர மோடி
எனவே, இன்று ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் தீபாவளி பயணம் செய்வது ராணுவ வீரர்களின் உழைப்பை இந்தியா சமூகம் புரிந்துக் கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதாய் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகை கொண்டாட காஷ்மீருக்கு கிளம்பியுள்ளார் .
Advertisment
லைன் ஆப் கன்ட்ரோல் பகுதியில் எல்லைக் காவலில் ஈடுபடும் ராணுவ மக்களோடு தீபாவளி பண்டிகை திருநாளை கொண்டாட விருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இந்திய ராணுவத்தால், காலாட் படை தினம் அனுசரிக்கப்படுகிறது. 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீரில் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்க்காக இந்தியா ராணுவம் இதே நாளில் காஷ்மீருக்குள் முதல் முறையாக நுழைந்தனர். அதனால், இந்நாளை காலாட் படை தினமாக இந்தியா ராணுவம் வருடாந்திரம் கொண்டாடி வருகிறது. எனவே, இன்று ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் தீபாவளி பயணம் செய்வது ராணுவ வீரர்களின் உழைப்பை இந்தியா சமூகம் புரிந்துக் கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதாய் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடுவது இது மூன்றாவது முறை. ஆனால், சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததற்கு பின் இதுவே முதல் முறை என்பதாகும்.
2014 ம் ஆண்டு சியாசின் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களின் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். 2015ம் ஆண்டு பஞ்சாப் எல்லையில் உள்ள ராணுவ தளவடாங்களில் தீபாவளி கொண்டாடினார். 2018ம் ஆண்டு உத்தரக்காண்டின் இந்தியா-சீனா எல்லை பகுதியில் காவல் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி திருநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .