பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12-13 தேதிகளில் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார் என்று வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi to visit US on Feb 12-13, will meet Trump: Foreign Secretary
ஜனவரி 20-ம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் அமெரிக்க பயணம் இது.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் குடியேறிய இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பிரதமர் மோடி, பிப்ரவரி 10-12 வரை பிரான்சுக்கு பயணம் செய்த பின்னர், அமெரிக்காவுக்குச் செல்வார். அங்கே பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு அவர் இணைத் தலைமை தாங்குவார்.
ஜனவரி 27-ம் தேதி மோடியுடன் டிரம்ப் பேசினார். அப்போது அவர் குடியேற்றம் குறித்து விவாதித்தார். மேலும், இந்தியா அதிக அமெரிக்கத் தயாரிப்பு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும் நியாயமான இருதரப்பு வர்த்தக உறவுகளையும் வலியுறுத்தினார்.