/indian-express-tamil/media/media_files/2hu52FRghuNub4aUmRPR.png)
காலில் விழுந்த எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
PM Modi warned MLA Vanathi Srinivasan : புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக அலுவலகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூங்கொத்துவிட்டு அவரின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நரேந்திர மோடி, வானதி சீனிவாசனை கண்டித்தார்.
இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. முன்னதாக, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை (செப்.21) நிறைவேறியது.
மாநிலங்களவை சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் பெரும்பான்மை வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 215 வாக்குகள் பதிவாகி இருந்தன.
மக்களவையில் இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதன்கிழமை (செப்.20) நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக AIMIM லிருந்து இரண்டு வாக்குகளும் பதிவாகி இருந்தன.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை அடையாளம் காண வெளிப்படையான செயல்முறை கடைப்பிடிக்கப்படும் என உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.