”மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார், அதனால்தான் சிகப்பாக இருக்கிறார்”: அல்பேஷ் தாக்கூர் பேச்சு

மோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார் எனவும், அதனாலேயே அவர் சிகப்பு நிறத்தை அடைந்ததாகவும், அல்பேஷ் தாக்கூர் கூறியுள்ளார்.

By: December 13, 2017, 10:00:02 AM

பிரதமர் நரேந்திரமோடி தினமும் ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார் எனவும், அதனாலேயே அவர் சிகப்பு நிறத்தை அடைந்ததாகவும், அல்பேஷ் தாக்கூர் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்காக போராடிவருபவரும், காங்கிரஸ் கட்சி சார்பாக ரதன்பூர் தொகுதியில் போட்டியிடுப்வாருமான அல்பேஷ் தாக்கூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, “பிரதமர் மோடி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான்களை தினமும் சாப்பிடுகிறார். அந்த காளான் ஒன்றின் விலை ரூ.80,000. தினமும் 5 காளான்கள் வீதம் சாப்பிடுகிறார். மோடி என்னைப்போன்று கருப்பானவர் தான். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட காளான்களை சாப்பிடுவதன் மூலம் அவர் சிவப்பு நிறத்தை பெற்றிருக்கிறார்.”, என தெரிவித்தார்.

மேலும், மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே இத்தகைய காளான்களை அவர் சாப்பிட்டு வருவதாக அல்பேஷ் கூறினார்.

மேலும், “காளான்களுக்காக பிரதமர் மோடி மாதந்தோறும் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவு செய்கிறார். அவர் ரொட்டியை சாப்பிடுவதில்லை”, எனவும் அல்பேஷ் தெரிவித்தார்.

மேலும், மோடி உண்ணும் உணவை ஏழைகளால் நுகர முடியாது எனவும், அது ஏழைகளின் உணவல்ல எனவும் அல்பேஷ் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm modi was dark became fair after eating imported mushrooms alpesh thakor

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X