Advertisment

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு; பிரதமர் மோடி

கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற மோடி வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டர். அவர் சூரல் மலை, முண்டக்கை பகுதிகளை விமானம் மூலமும், நேரில் இறங்கியும் பார்வையிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi Wayanad visit kerala cm Pinarayi Vijayan Tamil News

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் கேரளா வந்தடைந்தார்.

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வயநாட்டிரில் ல் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. இந்த பெருந்துயரத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் கேரளா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் கண்ணூர்  வந்த பிரதமர் மோடியை  கேரள ஆளுநர் முகமது ஆரிப், முதல்வர் பிரனாயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். 

இதன்பிறகு, கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வயநாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற மோடி வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டர். அவர் சூரல் மலை, முண்டக்கை பகுதிகளை விமானம் மூலமும், நேரில் இறங்கியும் பார்வையிட்டார். அப்போது உடன் கேரளா முதல்வர் பிரனாய் விஜயனும் இருந்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி மேப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சென்று, வயநாடு நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்ட பிரதமா மோடி, வயநாடு பேரிடர் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகளை சிதைத்துவிட்டது. நிலச்சரிவு ஏற்பட்டது முதல் ஒவ்வொரு பணிகளையம் கவனித்து வருகிறேன். இந்த பாதிப்புகளை தொடர்ந்து கேரளா அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. இந்த பேரிடர் சாதாரணமானது அல்ல.

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரண முகாம்களில் சந்தித்தேன். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்திற்கு நாம் தான் பொறுப்பு என்று கூறியுள்ள பிரதமர் மோடி,

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pm Modi Kerala Pinarayi Vijayan Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment