கோவிட்- 19 தொற்று மேலாண்மையில், உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளை அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். மேலும், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியைக் குறைப்பதற்கான அச்சுறுத்தலையும் அமெரிக்கா அரசு விடுத்துள்ளது. ஆனால், புதுதில்லி இதுபோன்ற வெளிப்படையான விமர்சனங்களை இதுவரையில் வெளிக்காட்ட வில்லை .
எவ்வாறாயினும், இந்தியாவின் கோவிட்- 19 தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும்போது, உலக சுகதார அமைப்பின் குறிப்பிட்ட "ஆலோசனைகளை" இந்திய அரசாங்கம் சத்தமில்லாமல் ஒதுக்கி வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகளின் அனுபவத்திற்கு இந்திய அரசு முன்னிரிமை கொடுத்திருக்கிறது. .
உலக சுகாதாரா அமைப்பு, கடந்த காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து நோய் தடுப்புமருந்தளித்தல், காசநோய் போன்ற புறக்கணிக்கப்பட்ட ட்ராபிக்கல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது போலவே, கொரோனா வைரஸ் பெருந்த்தொற்றின் தடுப்பு நடவடிக்கைக்கு மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க உதவி புரிந்து வருகிறது . எனினும், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் பல சந்தர்பங்களில் இந்தியா உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை கேட்க மறுத்திருக்கிறது.
சில குறிப்பிட்ட தருணங்களை கவனியுங்கள்
ஜனவரி 30 அன்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் , சீனாவுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்று கூறினார். மேலும், இது போன்ற ஒரு கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அப்போது இந்திய மக்கள் சீனாவுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கும் பயண அறிவுரை ( ஜனவரி 25 வெளியிடப்பட்டது ) இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. அதே நாளில் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசரக் குழு, வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கண்டறிதல், தனிமைப்படுத்துதல் ,தொடர்புத் தடமறிதல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து உலகளாவிய எச்சரிக்கையை எழுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது .
அடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்தியா ஒரு படி மேலே போய், சீனாவுக்கு அனைத்து விதமான பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியா குடிமக்களுக்கு பயண அறிவுரையை வழங்கியது .
மார்ச் 16 அன்று, “டெஸ்ட், டெஸ்ட்,டெஸ்ட்" இது தான் உலக சுகாதார அமைப்பின் தாரக மந்திரம் என்று கெப்ரேயஸ் தெரிவித்தார். மார்ச் 22 அன்று, ஐ.சி.எம்.ஆர் தலைவர் பால்ராம் பார்கவா, “இந்தியாவில் கண்மூடித்தனமான டெஸ்ட் இருக்காது. தனிமைப்படுதல் தனிமைப்படுதல், தனிமைப்படுதல் ” என்று தெரிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்தியா 75 மாவட்டங்களில் பொது முடக்கம் செய்வதாக அறிவித்தது. இதுவே, மார்ச் 24 நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் தேசிய அளவில் பொது முடக்கத்திற்கு வழிவகுத்தது. இந்த 21 நாட்கள் பொது முடக்க அறிவிப்பு கூட, "தனிமைப்படுத்தல் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி" என்று ஐ.சி.எம்.ஆர் எழுதிய ஒரு ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டிய நிலையில், கொரோனா வைரஸ் டெஸ்ட்டை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இருந்தாலும், இந்தியாவின் நெறிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. தொற்று அறிகுறிகள் காட்டும் பயணம் அல்லது தொடர்பு வரலாற்றைக் கொண்ட மக்கள், அறிகுறிகள் காட்டும் சுகாதார ஊழியர்கள், கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் (காய்ச்சல், இருமல் போன்றவை) ), உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியின் நேரடி தொடர்பில் இருந்த அறிகுறியற்ற உயர்-ஆபத்து நோயாளிகளுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 21 நாட்கள் பொது முடக்கம் தொடங்கிய மறுநாளே, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக் ரியான் “தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்தாமல், பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல், பொது முடக்கத்தில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமாக இருக்கும். திட்டமிடப்படமால் முடக்க நிலை விடுவிக்கப்படும் போது, நோய் தொற்றின் எண்ணிக்கை எழுச்சிபெரும், அது மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் மருத்துவ பராமரிப்பு வழிகாட்டுதல்கள் " கோவிட்-19 நோயாளிகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையையும் பரிந்துரைக்க தற்போது போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஆயினும்கூட, இந்தியா லோபினாவிர், ரிடோனாவிர் என்ற அதன் இரண்டு ஆன்டிவைரல்களை, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான மருத்துவ பராமரிப்பு வழிகாட்டுதல்களில் சேர்த்தது. பின்னர், கோவிட் - 19 வழிக்காட்டுதல்கள் திருத்தப்பட்டு, மேலே கூறிய இரண்டு ஆன்டிவைரல்களுக்குப் பதிலாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் ஆண்டிபயாடிக் அஜித்ரோமைசின் கலவையை சேர்த்தது.
எவ்வாறாயினும், உலக சுகாதார அமைப்பால் தொகுக்கப்பட்ட உலகளாவிய மருந்து சோதனை ஓட்டத்தில் ஒரு பகுதியாக இந்தியா இருக்கும் என்ற முடிவை சமீபத்தில் அறிவித்தது. மார்ச் 26 அன்று, கோவிட் -19 நோயைக் கையாள்வதற்கான மெய்நிகர் ஜி -20 உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “உலக சுகாதரா அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்தியாவுக்கான உலக சுகாதார அமைப்பு பிரதிநிதி ஹென்க் பெக்கெடம்,“கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. வைரஸ் நோயை முழுமையாகக் கட்டுபடுத்தவேண்டிய தருணம். கோவிட்-19 க்கான கண்காணிப்பு மற்றும் தொடர்புத் தடமறிதல் உள்ளிட்ட ஆயத்த நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடங்கி பல்வேறு மாநில அரசுகளுடன் உலக சுகாதார அமைப்பு நெருக்கமாக பணியாற்றி வருகிறது. இந்த முன்னோடியில்லாத சவாலை சமாளிப்பதற்கான உறுதியான தீர்மானத்தில் உலக சுகாதார அமைப்பு இந்திய அரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.