ஆக. 5-ல் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை: மோடி பங்கேற்பதாக அறிவிப்பு
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் கோயில் கட்டும் இடத்தில் நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் கோயில் கட்டும் இடத்தில் நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
Smart India Hackathon 2020 to kickstart, Prime Minister to Interact with participants
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் கோயில் கட்டும் இடத்தில் நடைபெறும் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
Advertisment
ராமர் கோயில் அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், “பூமி பூஜைக்கு பிரதமரை அறக்கட்டளை அழைத்ததாகவும், அவர் அதை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்திக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பூமி பூஜை நண்பகலில் நடைபெறும் என்றும், அதற்கு முன்னர், ஹனுமான் காரி மற்றும் ராம்லல்லா சிலையின் தற்காலிக கோவிலில் பிரதமர் பிரார்த்தனை செய்வார் என்றும் அவர் கூறினார்.
Advertisment
Advertisements
சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதை மனதில் கொண்டு, 150 அழைப்பாளர்கள் உட்பட மொத்தம் 200 பேர் பூமி பூஜைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சுவாமி கோவிந்த் தேவ் கிரி கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸின் செய்தித் தொடர்பாளர் கமல் நயன் தாஸ் கூறுகையில், “கோவிந்த் கிரி ஒரு மூத்த உறுப்பினர், நாங்கள் அவருடைய வார்த்தைகள்படி செல்வோம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முகூர்த்த தினம் அன்று மதியம் 12.15 மணிக்கு 32 விநாடிகள் நேரத்தில் நடைபெறும்” என்று கூறினார்.
அறக்கட்டளையின் மற்றொரு உறுப்பினர் காமேஷ்வர் சௌபால் கூறுகையில், “கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 200 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்று அறக்கட்டளை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.” என்று கூறினார். மேலும், பிரதமர் அலுவலகத்தின் முடிவைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறியபோது, “எங்களுடைய ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன” என்று அவர் கூறினார்.
ஜூலை 18ம் தேதி ராமர் கோயில் அறக்கட்டளை ஆகஸ்ட் 3 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய இரண்டு தேதிகளை பிரதமருக்கு அனுப்பியதாகவும், அவர் அதில் ஒன்றை பூமி பூஜைக்கு தேர்வு செய்யலாம் என்றும் கூறியிருந்தனர்.
தற்செயலாக, ஆகஸ்ட் 5ம் தேதி 370 வது பிரிவு திருத்தப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த ஒரு ஆண்டி நிறைவைக் குறிக்கிறது.
பிரிவு 370 மற்றும் ராமர் கோயில் இரண்டும் கருத்தியல் பிரச்னைகளாக இருந்தன. பாஜக அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கூட்டணி நிர்ப்பந்தத்தின் காரணமாக பின்னால் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
370 வது பிரிவு திருத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, நம்பவர் 2019-இல், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி - பாபர் மசூதி இடத்தை ஒரு கோயில் கட்டுவதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஜூலை 18ம் தேதி அறக்கட்டளை கூட்டத்தில் இருந்து வெளிவந்த, அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், முக்கிய பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி, கோயில் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட இடத்தில் 60 அடி ஆழத்தில் இருந்து மண்ணை பரிசோதனைக்கு சேகரித்தது என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"