PM Modi, Xi conclude informal summit with promise: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சென்னைக்கு வெளியே உள்ள மகாபலிபுரத்தில் சனிக்கிழமை தங்கள் முறைசாரா உச்சி மாநாட்டை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய தொடக்கத்துடன் நிறைவு செய்தனர். கோவலத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவில் ஷியுடன் பேச்சுவார்த்தை நடத்திய மோடி, இரு தலைவர்களும் தங்கள் வேறுபாடுகளை விவேகத்துடன் நிர்வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதை அவர்கள் சர்ச்சைகளாக மாற விடமாட்டார்கள் என்றும் கூறினார்.
“நாங்கள் விவேகத்துடன் வேறுபாடுகளை நிர்வகிக்க முடிவு செய்துள்ளோம். அவற்றை மோதல்களாக அனுமதிக்க மாட்டோம். நாங்கள் ஒருவருக்கொருவர் கவலைகளை நுண்ணுணர்வுடன் உணர்ந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளோம்”என்று மோடி கூறினார்.
மேலும் அவர், கடந்த ஆண்டு சீனாவில் வுஹான் உச்சிமாநாட்டிலிருந்து இருதரப்பு உறவுகளில் ஸ்திரத்தன்மை அதிகரித்துள்ளது. புதிய வேகம் ஏற்பட்டுள்ளது என்றும் இருதரப்பினருக்கும் இடையில் ராஜதந்திர தொடர்பு அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
தனக்கும் மோடிக்கும் இருதரப்பு உறவுகள் குறித்த விவாதம் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பதாகவும், உச்சிமாநாடுகள் இந்தியா-சீனா உறவுகளில் ஸ்தூலமான முன்னேற்றத்தை உருவாக்குகின்றன என்றும் ஜி ஜின்பிங் கூறினார்.
இந்த வகையான உச்சிமாநாடுகளை நடத்த முன்முயற்சி செய்ததற்காக அவர் மோடியைப் பாராட்டினார். இது ஒரு நல்ல யோசனை என்று கூறினார்.
"இந்த வகையான முறைசாரா உச்சிமாநாடுகளில் நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம் என்பதையும், இந்த வகையான சந்திப்பைத் தொடரலாம் என்பதையும் நடந்த நிகழ்வுகள்நிரூபித்துள்ளது" என்று ஜி ஜின்பிங் மோடியிடம் கூறினார்.
இரு நாடுகளும் இப்போது ஆழ்ந்த மூலோபாய தொடர்பு, மிகவும் பயனுள்ள நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் அவை இப்போது பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மூன்றாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்காக சீனாவுக்கு பயணம் செய்ய ஜி ஜின்பிங்கின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.
ஜி ஜின்பிங் வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். முதல் நாளில், இரு தலைவர்களும் மஹாபலிபுரத்தில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கம்பீரமான நினைவுச்சின்னங்களை பார்வையிட்டு பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டனர். அங்கே அவர்கள் ஒரு கலாச்சார கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மோடி விருந்தளித்தார்.
ஊடகங்களுடன் பேசிய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, தலைவர்கள் ஒருவருக்கொருவர் நடத்திய கலந்துரையாடல் வர்த்தகம் மற்றும் பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றார். தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வதில் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படத் தீர்மானித்ததோடு, திறந்த மற்றும் நல்ல பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர்.
மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையேயான உரையாடல் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் பல சிக்கல்களைத் தொட்டுப் பேசினர்.
“இரு தலைவர்களும் தாங்கள் பெரிய நாடுகள் என்று கூறினர். தீவிரமயமாக்கல் இருவருக்கும் கவலை அளிக்கும் விஷயம். இருவரும் ஒன்றாக வேலை செய்வார்கள். இரு தலைவர்களும் வர்த்தக பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வர்த்தக அளவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விவாதித்தனர். மேலும், முதலீடுகளின் பகுதிகளை அடையாளம் காண முயன்றனர்.” என்று கோகலே கூறினார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகள் குறித்து உயர்மட்ட அளவில் விவாதிக்க நாடுகளுக்கு இடையே ஒரு புதிய வழிமுறை நிறுவப்படும் என்று கோகலே கூறினார். இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சீனாவின் துணைப் பிரதமர் நிர்வகிப்பார்கள் என்றார்.
சீனாவில் நடைபெறவுள்ள அடுத்த உச்சிமாநாட்டிற்கு மோடியை ஜி ஜின்பிங்கை அழைத்ததாகவும், அதன் தேதிகள் பின்னர் தயாரிக்கப்படும் என்றும் வெளியுறவு செயலாளர் கோகலே கூறினார்.
370 வது பிரிவை திருத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை இரு தலைவர்களால் விவாதிக்கப்பட்டதா என்று கேட்கப்பட்டபோது, கோகலே இந்த பிரச்சினையை எழுப்பப்படவில்லை, விவாதிக்கவில்லை என்று கூற மறுத்தார். ஆனால், “இது இந்தியாவின் உள் விவகாரம் என்பதில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.” என்று அவர் கூறினார்.